நாக சைத்தன்யாவை மறக்காத சமந்தா.. இன்ஸ்டாவில் வைத்திருக்கும் அந்த போட்டோ!

சென்னை: பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நடந்துள்ளது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், நாக சைத்தன்யா இன்ஸ்டாகிராமில் சமந்தாவின் ஒரு போட்டோவை டெலிட் செய்யாமல் வைத்து இருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகனான நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக இருக்கிறார். இவர், இரண்டாவதாக நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே,தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கிறார்கள். இவரின் மூத்த மகனான நாக சைத்தன்யா, நடிகை சமந்தா 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.

Samantha Naga Chaitanya Sobhita Dhulipala

நாக சைத்தன்யா, சமந்தா: இதையடுத்து, இவர்கள் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் இருந்து, நாகசைத்தன்யாவுடன் இருந்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்து விட்டார். அதே போல, நாக சைத்தன்யாவும் சமந்தாவின் அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்து விட்டார். இதையடுத்து, 2021ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர்.

நிச்சயதார்த்தம்: இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பியதை அடுத்து, நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடந்துள்ளது. நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் நாக சைத்தன்யாவிற்கும் சோபிதாவுக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

மறக்காத சமந்தா: இந்நிலையில், சமந்தாவின் ரசிகர் ஒருவர், சமந்தா இன்றும் நாக சைத்தன்யாவை மறக்கவில்லை. இன்ஸ்டாகிராமிலிருந்து நாக சைத்தன்யாவுடனான அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்து விட்ட போதும், அவர் 2018 ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் சமந்தாவும் ஒரு ரேஸ் காருக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை அழிக்காமல் வைத்து இருக்கிறார். இதை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது தயவு செய்து அந்த போட்டோவை டெலிட் செய்யுங்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X