250 கோடி ப்பே.. நாக சைதன்யா ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்தாரா?.. ஓபனாக பேசிய சமந்தா

சென்னை: நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அநேகமாக ஹிந்தியில் சல்மான் கானுடன் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஜீவனாம்சம் குறித்து சமந்தா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். சில வருடங்கள் காதலித்த அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம், செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.

Samantha Open Talks About Naga Chaitanya at Old Interview Gone Trending

விவாகரத்து: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்ததால்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. ஆனால் எதற்காக பிரிந்தோம் என்பதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. திருமண உறவிலிருந்து வெளியேறிய சமந்தா அதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவு கவர்ச்சி காண்பித்து நடிக்க ஆரம்பித்தார்.

மையோசிடிஸ்: புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டான சூழலில் மையோசிடிஸ் நோய் அவருக்கு வந்தது. இதன் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். ஒருவழியாக நோயிலிருந்து மீண்ட அவர் சாகுந்தலம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்தது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.

குட்டி பிரேக்: சாகுந்தலம் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். அந்தப் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி தற்போது விலகியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருக்கும் அவர் மீண்டும் விரைவில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

சமந்தா பேட்டி: இந்நிலயில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்றில் உங்களுக்கு 250 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக கொடுக்க நாக சைதன்யா முன்வந்ததாகவும், அதனை சமந்தா வாங்க மறுத்துவிட்டதாகவும் பரவிய தகவல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் பற்றிய செய்தியை படித்து வருத்தப்பட்டேன். எப்போது வருமான வரித்துறையினர் வந்து கேட்டாலும் எதுவுமே இல்லை என்று அவர்களிடம் காட்டுவதற்கு ரெடியாக இருந்தேன்' என்றார். இந்த பழைய பேட்டிதான் இப்போது சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X