நான் செகண்ட் ஹேண்டா?.. அவர்களை பழி வாங்குகிறேனா?.. முன்னாள் கணவர் குறித்து மனம் திறந்த சமந்தா

சென்னை: நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்ததையடுத்து சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக அறிவித்தனர் நாக சைதன்யாவும், சமந்தாவும். அவர்களின் விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களை உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவர்களின் பிரிவுக்கு பிறகு காரணமாக ஏகப்பட்ட யூகங்கள் சொல்லப்பட்டன. அதுமட்டுமின்றி சமந்தா மீதும் பலரும் விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் சமந்தா முக்கியமானவர். அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்டதால் கண்டிப்பாக திரைத்துறையில் ஃபேவரைட் ஜோடியாக வலம் வருவார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அதற்கேற்றபடிதான் சில வருடங்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

samantha naga chaitanya

அதிர்ச்சி தந்த பிரிவு: சமந்தாவும் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்தார். சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வருடங்களுக்கு முன்பு சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், நானும் நாக சைதன்யாவும் பிரிகிறோம். நாங்கள் பிரிந்தாலும் எங்களுக்குள் இருக்கும் பரஸ்பர மரியாதை ஒருபோதும் குறையாது என்று தெரிவித்திருந்தார். அதேபோல் நாக சைதன்யாவும் தங்களது பிரிவை டீசண்ட்டான முறையில் தெரிவித்தார்.

என்ன காரணம்: அவர்களின் பிரிவுக்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது சமந்தா திருமணத்துக்கு பிறகு நடித்ததுதான் முக்கிய காரணம் என்று சிலர் கூறினார்கள். இன்னும் ஒருதரப்பினரோ அதெல்லாம் இல்லை சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொன்னார்கள். மேலும் பிரிவுக்கு பிறகு நாகார்ஜுனா குடும்பம் கொடுத்த ஜீவனாம்சத்தையும் சமந்தா தூக்கி எறிந்துவிட்டார் என்றும் ஒரு தகவல் பரவியது.

மீண்டும் நடிப்பில்: சூழல் இப்படி இருக்க மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் சமந்தா. அந்தவகையில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களில் அவர் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களின் திருமணம் டிசம்பர் நான்காம் தேதி நடக்கவுள்ளது.

சமந்தா பேட்டி: இந்நிலையில் சமந்தா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து சமயம் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "எனக்கு விவாகரத்து ஆன சமயத்தில் பலரும் என்னை செகண்ட் ஹேண்ட், வாழ்க்கை வீணாக போய்விட்டது, சமந்தாவை யூஸ் செய்துவிட்டார்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். அப்போது எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்தப் பிரச்னை என்பது எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்துக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.

என்ன செய்ய முடியும்: அந்த சமயத்தில் நான் கொஞ்சம் டவுனாகத்தான் இருந்தேன். அதற்காக என்ன செய்ய முடியும் ஒரு மூலையில் அமர்ந்து அழுதுகொண்டா இருக்க முடியும். சரி நடந்தது நடந்துவிட்டது வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதையும் நான் பழிவாங்குவதற்காக வாழ்ந்துகொண்டிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அர்த்தம் இல்லை. நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இவ்வளவு பிரச்னைக்கு பிறகும் என்னுடன் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X