நாக சைதன்யாவுடன் பிரிவு.. நம்பவே கூடாதுனு இருந்தேன்.. இரண்டாவது திருமணத்துக்கு பின் மனம் திறந்த சமந்தா

சென்னை: நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த வருடம் கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராஜுக்கும் இது மற்றொரு திருமணம் ஆகும். தற்போது இரண்டு பேரும் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இந்நிலையில் தனது முதல் திருமண முறிவு குறித்தும்; அதற்கு பிறகான தனது மனநிலைமை குறித்தும் சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் சமந்தா.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. ஆனால் போகப்போக சரியாக பிக்கப் செய்துகொண்ட அவர்; ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். விஜய், சூர்யா, தனுஷ்,கார்த்தி என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இதன் காரணமாக அவரது மார்க்கெட் சரசரவென்று உயர்ந்தது. கிளாமர், ஹோம்லி என்று எதுவாக இருந்தாலும் அது அவருக்கு செட் ஆனது.

Samantha Opens Up on Divorce Pain and Second Marriage with Director Raj Nidimoru
Photo Credit:

நாக சைதன்யாவுடன் திருமணம் டூ பிரிவு: சூழல் இப்படி இருக்க தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்தார். அவர்கள் திருமணத்துக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததால் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் விழுந்த விரிசல்; நாளடைவில் பெரிதாகி விவாகரத்தில் முடிந்தது. இரண்டு பேரும் புரிதலோடு விலகிவிட்டார்கள்.

தாக்கிய நோய், மீண்ட சமந்தா: இதற்கிடையே சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் தோல் வியாதியும் வந்தது. அதன் காரணமாக சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் நிலைக்கு ஆளானார். தொடர்ந்து சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய அவர் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் முதல் இன்னிங்ஸை போல் இரண்டாவது இன்னிங்ஸில் சோபிக்க முடியவில்லை. இது ஒருபக்கம் இருக்க சமந்தா காலம் முழுக்க சிங்கிளாகவே இருந்துவிடக்கூடாது; இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று குடும்பத்தினரும், அவரது ரசிகர்க்ளும் ஆசைப்பட்டார்கள்.

Also Read
சார் நமீதா சார்.. சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துட்டாங்க.. எந்தப் படத்தில் என்ன ரோல் தெரியுமா?
சார் நமீதா சார்.. சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துட்டாங்க.. எந்தப் படத்தில் என்ன ரோல் தெரியுமா?

இரண்டாவது திருமணம்: அவர்களது ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த வருடத்தில் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் ஃபேமிலி மேன் உள்ளிட்ட வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டார். தங்களது காதலை ரொம்பவே ரகசியமாக வைத்திருந்து; சிம்ப்பிளாக திருமணத்தை முடித்துக்கொண்டார்கள். ராஜூவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சமந்தா பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில் தன்னுடைய முதல் திருமண உறவு முறிந்த பின் இருந்த மன நிலைமை குறித்தும், ராஜ் நிடிமோரு குறித்தும் பேசிய அவர், "முதல் திருமண முறிவுக்கு பிறகு நான் முழுமையாக உடைந்து போனேன். மீண்டும் யாரையும் நம்பவோ, காதலிக்கவோ, அவர்களை சார்ந்திருக்கவோ கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒருகட்டத்தில் இதுபோன்று நிபந்தனைகள் ஏதுமின்றி திறந்த மனதுடன் வாழ்வதற்கு என்னை நானே அனுமதித்தபோது ராஜுடைய அன்பை புரிந்துகொண்டேன். தற்போது சிறந்தவளாக மாறியிருக்கிறேன். வேலை, பயணம், உடற்பயிற்சி என அனைத்திலும் நாங்கள் சேர்ந்தே இருக்கிறோம். ஒருநாள் கூட அவரை விட்டு பிரிந்திருப்பது எனக்கு கஷ்டமானதாக இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X