72 வயது நடிகருக்கு ஜோடியான சமந்தா.. ஆனால், ஒரு ட்விஸ்ட்.. வேறலெவலில் டிரெண்டாகும் வீடியோ!

திருவனந்தபுரம்: நாளைக்கு சமந்தா சமீபத்தில் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. ஜோதிகாவை தொடர்ந்து சமந்தா மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் மம்மூட்டியுடன் இணைந்து அவர் நடித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

மயோசைட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அந்த நோயிலிருந்து குணமாக ஏகப்பட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது நலமுடன் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

Samantha pairs opposite to Mammootty in a new advertisement

முதலில் கிடைக்கும் விளம்பர பட வாய்ப்புகளில் நடித்து வரும் சமந்தா அதன் வீடியோ காட்சிகளை தற்போது வெளியிட்டு வருகிறார்.

நாக சைதன்யாவை சந்தித்த சமந்தா: ஏ மாய சேசாவே படத்தின் மூலம் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமான சமந்தா நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார். நான்கு ஆண்டுகள் இருவரும் காதல் பறவைகளாக திரிந்து வந்த நிலையில், திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சில ஆண்டுகளாக சமந்தா மற்றும் நாக சைதன்யா சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் அமேசான் பிரைம் நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

Samantha pairs opposite to Mammootty in a new advertisement

விளம்பரங்களில் பிஸி: மீண்டும் நடிக்க வந்துள்ள நடிகை சமந்தா சமீபத்தில் ஐஸ் க்ரீம் விளம்பரத்தில் படுதாராளமாக நடித்திருந்தார். இந்நிலையில், கோல்டு லோன் விளம்பரம் ஒன்றிலும் அவர் நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. அமேசான் பிரைம் நிகழ்ச்சியிலும் நடிகை சமந்தா கலந்து கொண்ட காட்சிகள் வெளியாகி டிரெண்டாகின.

காலில் விழுந்த சமந்தா: தயாரிப்பாளர் கரண் ஜோஹர் காலில் நடிகை சமந்தா அமேசான் பிரைம் ஓடிடி அறிமுக நிகழ்ச்சியில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். விரைவில் சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது.

Samantha pairs opposite to Mammootty in a new advertisement

மம்மூட்டியுடன் செஸ் விளையாட்டு: மம்மூட்டியுடன் ஜோதிகா காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். அடுத்து மம்மூட்டிக்கு ஜோடியாக சமந்தா மலையாள படத்தில் நடிக்கப் போகிறாரா என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், மம்மூட்டிக்கு ஜோடியாக விளம்பரம் ஒன்றில் சமந்தா நடித்திருக்கிறார். சமந்தா மற்றும் மம்மூட்டி செஸ் விளையாடுவது போன்று அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் பட அறிவிப்பு: அடுத்தடுத்து விளம்பரப் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா கூடிய விரைவிலேயே தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேலும், புஷ்பா 2 படத்திலும் சமந்தாவின் ஐட்டம் சாங் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குட் லுக்கில் மம்மூட்டி: 72 வயதானாலும் இன்னமும் இளமை மாறாமல் நடிகர் மம்மூட்டி குட் லுக்கிங்காக இருக்கிறார் என்றும் சமந்தாவுக்கு இணையாக கோட் சூட் உடையை அணிந்து கொண்டு செம ஸ்மார்ட்டாக மம்மூட்டி இருக்கும் நிலையில், இருவரது ஜோடி பொருத்தமும் பிரம்மாதமாக இருக்கிறது என்றும் கூடிய சீக்கிரமே இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X