பார்ட்டியில் ஒன்றாய் கும்மாளம் போட்ட டாப் நடிகைகள்...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்

சென்னை : தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. அழகான, திறமையான நடிகை என பெயர் வாங்கியவர். தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஆனால் சமீப காலமாக அவரை பற்றி நல்லவிதமான எந்த தகவலும் வெளியாகவில்லை. வதந்திகளுக்காக மட்டுமே சமந்தா சார்ந்த செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இது அவரது ரசிகர்களை மிகவும் வேதனையடைய வைத்துள்ளது.

நாக சைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்து கொள்ள போவதாகவும் விடாமல் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது பற்றி சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

பற்றி எரியும் வதந்தி

பற்றி எரியும் வதந்தி

சோஷியல் மீடியா பக்கங்களில் தனது பெயரை நீக்கி விட்டு, எஸ் என சமந்தா மாற்றியது தான் இந்த விவாகரத்து வதந்தி பரவ காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பிரேக் எடுக்க போவதாக சமந்தா கூறியது எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியதாக ஆகி விட்டது. விவாகரத்து காரணமாக தான் பிரேக் எடுக்க போகிறார் என கூறப்பட்டது.

நல்ல விஷயங்கள் பரவவில்லை

நல்ல விஷயங்கள் பரவவில்லை

சமந்தா - நாக சைதன்யா ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக தான் அவர் பிரேக்கை அறிவித்தார். இந்த தம்பதி ஒன்றாக இணைந்து கோவா மற்றும் மும்பையில் வீடு வாங்கி உள்ளது என பல நல்ல தகவல்களும் கூறப்பட்டாலும் அதைத் தாண்டி விவாகரத்து வதந்தி தான் அதிகம் பரவி வருகிறது.

பத்திரிக்கையாளரை திட்டிய சமந்தா

பத்திரிக்கையாளரை திட்டிய சமந்தா

திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற சமந்தாவிடம் கூட பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து வதந்தி பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் கடுப்பான சமந்தா, புத்தி இருக்கா என கேட்டு விட்டு போய் விட்டார். இந்த செய்தி கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பார்ட்டி கொண்டாடி நடிகைகள்

பார்ட்டி கொண்டாடி நடிகைகள்

அதே சமயம் இந்த வதந்தி, பரபரப்பு அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு, சமந்தா தனது வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தனது திரையுலக தோழிகளான கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் பார்ட்டி கொண்டாடி உள்ளார் சமந்தா. கையில் ரோஜாப்பூவுடன் இந்த டாப் நடிகைகள் பார்ட்டியில் ஒன்றாக கன்னத்தோடு கன்னம் வைத்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Nayanthara latest video from KRK | Vignesh Shivan, Vijaysethupathi
வைரலாகும் ஃபோட்டோஸ்

வைரலாகும் ஃபோட்டோஸ்

அவர் பகிர்ந்த இந்த ஃபோட்டோக்கள் தீயாய் பரவி வருகின்றன. மேக்அப் இல்லாமல் இந்த டாப் நடிகைகள் பார்ட்டி கொண்டாட என்ன காரணம் என பலர் கேட்டு வருகின்றனர். இருந்தாலும் தங்களின் ஃபேவரைட் நடிகைகள் ஒன்றாக இருக்கும் ஃபோட்டோவை அவர்களின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

படங்கள் ஓவர்

படங்கள் ஓவர்

சமந்தா தற்போது தான் தெலுங்கில் வரலாற்று காவிய படமான சாகுந்தலம் மற்றும் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டின் முற்பகுதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X