மீண்டும் வில்லி கதாபாத்திரம்.. இந்த முறையாவது மிரட்டுவாரா சமந்தா!

நடிகர் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பிறகு மீண்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Samantha to play a negative role in The Family Man | வில்லி கதாபாத்திரம் மிரட்டுவாரா சமந்தா!

சென்னை: யுடர்ன், சூப்பர் டீலக்ஸ், சீமராஜா என சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்தவொரு தமிழ் சினிமாவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால், தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான ஓ பேபி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில், வெப் தொடர் ஒன்றில், வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே

ஏற்கனவே

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் வெளியான பத்து எண்றதுக்குள்ள படம் படு தோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் நாயகி மற்றும் வில்லி என இரு வேடங்களில் சமந்தா நடித்திருந்தார். வில்லி வேடத்திற்காக புகை பிடித்தெல்லாம் சமந்தா நடித்தாலும் அவர் முகத்தில் வில்லத்தனமே வரவில்லை என விமர்சகர்கள் விமர்சித்து இருந்தனர்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் சமந்தாவிற்கு தமிழில் நல்ல வெற்றியை தேடித்தந்தது. அதற்கு பிறகு வெளியான, யூடர்ன், சீமராஜா மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் சமந்தாவிற்கு தமிழில் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளும் சமந்தாவிற்கு தமிழில் வரவில்லை. இதனால், டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தாவிற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்தன. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் இந்த படத்தில் சமந்தாவின் கதாபாத்திரத்தை புகழ்ந்து எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வில்லி

மீண்டும் வில்லி

நாயகியாக நடித்து வரும் சமந்தா, பத்து எண்றதுக்குள்ள படத்தை தொடர்ந்து தற்போது மனோஜ் பாஜ்பாய் நடித்து வரும் 'A Family Man' வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். ஆனால், இந்த வெப் தொடரில் சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்ட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X