சமந்தாவா இது.. அடையாளமே தெரியலையே.. மேக்கப் இல்லாமல், செம ஸ்லிம்மா என்ன விளையாடுறாரு பாருங்க!

சென்னை: நடிகை சமந்தா நடிப்பதை தாண்டி ஆரோக்கியம் பற்றி பாட் காஸ்ட்டில் பேசி வருகிறார். நடிகை நயன்தாரா ஏகப்பட்ட புதிய தொழில்களை ஆரம்பித்துள்ள நிலையில், சினிமாவை தாண்டி தானும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நடிகை சமந்தா தற்போது Pickle Ball விளையாட்டில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

World Pickle Ball League போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அணியை சொந்தமாக வாங்கியுள்ள நடிகை சமந்தா சமீபத்தில், பிக்கல் பால் விளையாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

samantha naga chaitanya heroine

நடிகை சமந்தா தனது உடல் எடையை வொர்க்கவுட் செய்தும் டயட் இருந்தும் ரொம்பவே ஸ்லிம்மாக மாற்றிய நிலையில், மேக்கப் கூட அணியாமல் விளையாடியதும் யார் இந்த நடிகை என்கிற கமெண்ட்டுகள் அதிகம் குவிய ஆரம்பித்துள்ளன.

சென்னை அணியின் ஓனர்: நடிகை ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் ஓனராக பல ஆண்டுகள் கலக்கி வரும் நிலையில், ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு விளையாட்டிலும் தங்கள் கவனத்தை செலுத்தி அதிலும், முதலீடு செய்து சம்பாதித்து வருகின்றனர். நடிகர் சூர்யா டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாட்டின் சென்னை அணியின் ஓனராக உள்ள நிலையில், நடிகை சமந்தா பிக்கல் பந்து விளையாட்டின் சென்னை அணியின் ஓனராக மாறியுள்ளார்.

samantha naga chaitanya heroine

ஜாலியாக விளையாடிய சமந்தா: விளையாட்டு வீரர்களுடன் இணைந்துக் கொண்டு பிங்க் நிற ஜிம் உடையை அணிந்துக் கொண்டு செம ஜாலியாக நடிகை சமந்தா நம்ம ஊர் தலைவர்கள் எல்லாம் கிரிக்கெட் போட்டியை ஆரம்பித்து வைக்கும் போது காமெடியாக விளையாடுவதை போல ரொம்பவே ஸ்லோவாக விளையாடுவதும், பந்துகளை தவறவிட்டால், பேட்டை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு ஃபன் பண்ணுவதுமாக விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

வருந்தும் ரசிகர்கள்: பாலிவுட் செல்வதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ஓடாய் தேய்ந்ததை போலவே தற்போது பாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்க சமந்தாவும் ரொம்பவே ஸ்லிம்மாகி வருகிறாரே என்றும் மேக்கப் இல்லாமல் அது சமந்தாவா என்றே தெரியவில்லை என்றும் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்க சமந்தா என பலரும் வருத்தத்துடன் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

தளபதி 69: எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தில் சமந்தா தான் ஹீரோயின் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தளபதி விஜய்யின் கடைசி படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடிக்க மேலும், சில நடிகைகளும் போட்டி போட்டு வருவதாகவும் சீக்கிரமே ஹீரோயினை எச். வினோத் உறுதி செய்து விடுவார் என்றும் கூறுகின்றனர்.

மறு திருமணம் செய்வாரா?: நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்து விட்டு சோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்துக் கொண்ட நிலையில், நடிகை சமந்தாவும் மறு திருமணம் செய்வாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. சினிமா மற்றும் தொழில் துறையில் தான் தற்போது சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் உண்மையான காதல் அவருக்கு கிடைத்தால் மட்டுமே திருமணம் பற்றி முடிவெடுப்பார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X