சமந்தா இப்படி செய்திருக்க கூடாது… பொசசிவ்வான நயன்தாரா!
சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டைட்டானிக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும்,டீசரில் விஜய்சேதுபது நயன்தாரா, சமந்தாவுக்கு நடுவே நின்று அல்டிமேட்டாக இருந்த இந்த திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது என்று சொல்லாம். இத்திரைப்படம் ஏப்ரல் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு முடிந்தது
படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டாலும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்தால், அண்மையில் அந்த பாடல் காட்சியும் சென்னையில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. தற்போது படம் முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்

கேக் வெட்டி கொண்டாட்டம்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினர் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இதில் விக்னேஷ் சிவன்,நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபது ஒன்றாக இணைந்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video

பொசசிவ்வான நயன்தாரா
இந்த கொட்டத்தில் கேக் வெட்டி முடித்த பிறகு சமந்தா, மகிழ்ச்சியின் மிகுதியால் விக்னேஷ் சிவன்முகத்தில் கேக்கை பூசி விளையாடினார். இதை நயன்தாரா ஓரமாக நின்று சிரிந்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த புகைப்படம் தற்போது ட்ராண்டாகி வரும் நிலையில், நயன்தாராவின் ரசிகர்கள் சமந்தா இப்படி விளையாட்டு இருக்கக்கூடாது என்றும் நயன்தாரா நிச்சயம் பொசசிவ் ஆகி இருப்பாங்க என்றும் கருத்துக் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











