twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா

    |

    Recommended Video

    The Life of 96 | Vijay Sethupathi, Trisha | One year of 96 movie

    ஹைதராபாத்: நடிகை சமந்தா தெலுங்கில் நடிக்கும் 96 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது என்று தெரிகிறது. இது பற்றி குறிப்பிட்டு, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜானு ரோலின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, அந்த கேரக்டரில் நடிப்பது குறித்து குறிப்பிட்டு இட்ஸ் ராப் என்றும், மற்றொரு முக்கியமான படம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்ததாக கூறினார்.

    சமந்தா கடைசியாக பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து இருந்தார்.

    தற்போது அவர் தெலுங்கில் சார்வனந்த்துடன் 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து, கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 96. இதனையடுத்து இந்த படம் முதழில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. தற்பொழுது, இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யபட்டு வருகிறது.

    "என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்".. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை!

    தெலுங்கு 96

    தெலுங்கு 96

    தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பிரேம்குமார். இந்த படம் த்ரிஷாக்கு மிக பெரிய அளவில் புகழையும் பெயரையும் பெற்றுக் தந்தது. அதே போல் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் சமந்தாவுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தரும் என டோலிவுட் சினிமா உலகில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    சமந்தா

    சமந்தா

    சமந்தா தெலுங்கில் நாக சைதன்யாவை திருமணம் செய்த பின்பு, நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அஞ்சான் படத்தை தவிர்த்து, வேறு எந்த படத்திலும் கவர்ச்சி நாயகியாக நடித்ததில்லை. அனைத்து படங்களிலும் அவர் கதையின் நாயகியாக நடிக்கவே ஆசைப்படுகிறார். சென்னையில் படித்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் படங்களில் நடிப்பதில் இவருக்கு சிரமம் ஏற்பட்டதில்லை.

    சமந்தா மகிழ்ச்சி

    தற்போது தெலுங்கில் 96 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜானு கதாபாத்திரத்தின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, அந்த கேரக்டரில் நடிப்பது குறித்து குறிப்பிட்டு இட்ஸ் ராப் (Its Wrap) என்றும், மற்றொரு முக்கியமான படம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்ததாக கூறினார். இந்தப் பட குழுவினருடன் வேலை செய்தது மிக சந்தோஷமாக உள்ளதாகவும், அதற்காக நன்றியும் தெரிவித்திருந்தார். இந்த படக்குழு தனது கனவு படக்குழுவாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.

    மஞ்சள் சுடிதார்

    மஞ்சள் சுடிதார்

    96 படத்தின் இயக்குநர் தமிழில் படம் எடுக்கும் பொழுது, அவர் மனதில் முதலில் வந்தது மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர். ஆனால் என்னவோ கால்ஷீட் குழப்பங்கள் ஏற்பட மஞ்சு வாரியரை அவர்களால் நடிக்க வைக்க முடியாமல், கடைசியில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். படம் வெளியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு, த்ரிஷாவின் சினிமா கேரியரில் இப்படம் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்போது சமந்தாவுக்கு அடித்த இந்த பம்பர் குலுக்கல் வெற்றி பெற வேண்டும். மஞ்ச சுடிதார் மனதை மயக்கட்டும்.

    English summary
    Actress Samantha's Telugu film '96' seems to be in the offing. Mentioning this, Samantha posted a picture of her Janu character on her Instagram page. She also noted that the character was another important film. Also, she said that playing the role was challenging.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X