Samantha: சிகிச்சைக்கு பிரபல நடிகரிடம் கடன் வாங்கினேனா? நடிகை சமந்தா விளக்கம்!

சென்னை: சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கியதாக இணையத்தில் பரவி வரும் செய்தியை நடிகை சமந்தா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள குஷி படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 1ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Samantha recently reacted to claims over receiving financial aid from a Telugu actor for her Myositis treatment

அதை தொடர்ந்து உலக புகழ் பெற்ற வெப் தொடரான சிட்டாடல் தொடரின் இந்திய தயாரிப்பில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் இத்தொடரில் வருண் தவான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகை சமந்தா: மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக பல மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த சமந்தா. ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த படத்தின் படப்பிடிப்பினை முடித்துவிட்டு, விடுமுறையை இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் தனது தோழியும் மேக்கப் கலைஞருமான அனுஷா சுவாமி என்பவருடன் சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Samantha recently reacted to claims over receiving financial aid from a Telugu actor for her Myositis treatment

ரூ.25 கோடி கடன்: இதையடுத்து, சாக்ஷி என்ற தெலுங்கு சேனல் ஒன்று, நடிகை சமந்தா தனது மருத்துவ செலவுக்காக பிரபல தெலுங்கு நடிகரிடம் இருந்து ரூ.25 கோடி கடன் வாங்கியதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்த நடிகர் யார் என்பது குறித்து அந்த தொலைக்காட்சி எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

தவறான செய்தி: இந்நிலையில், சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கியதாக இணையத்தில் பரவி வரும் செய்தியை மறுத்துள்ள சமந்தா, மையோசிடிஸ் நோய்க்கு ரூ.25 கோடி கடன் வாங்கி செலவு செய்ததாக தவறான செய்தியை பரவி உள்ளனர். நான் என் சிகிச்சைக்காக அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யவில்லை. சிறிய அளவு பணத்தை எனக்காக செலவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Samantha recently reacted to claims over receiving financial aid from a Telugu actor for her Myositis treatment

கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை: என் சிகிச்சை செலவுக்காக மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நான் சினிமாவில் நன்றாக சம்பாதிக்கிறேன். என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். மேலும் மையோசிடிஸ் என்பது ஒரு நிலை, அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற செய்தி வெளியிடும் போது சற்று பொறுப்புடன் வெளியிடுங்கள் என் நடிகை சமந்தா அந்த பதிவில் கூறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X