சமந்தா மீண்டும் காதலிக்கிறாரா?.. குட் நியூஸ் சொல்வாரா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கியிருக்கிறார். அதன்படி அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது; அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. மாநாடு படத்துக்கு பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களும் அவருக்கு நல்ல ஹிட்டையே கொடுத்தன. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்துவருகிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த சமந்தா அதற்கு பிறகு ஹீரோயினாக வளர்ந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அவர் தனது அபாரமான திறமையால் குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணி நடிகை என்ற இடத்தை அடைந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். அங்கும் தனது கொடியை பறக்க வைத்த அவர் நாக சைதன்யாவை காதலித்தார்.

பிரிந்த சமந்தா: நாக சைதன்யா - சமந்தா காதலுக்கு நாகார்ஜுனா வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து இரண்டு பேரும் 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்துக்கு பிறகு சமந்தா தொடர்ந்து நடித்தார். அதற்கு சைதன்யாவின் ஆதரவும் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் நாக சைதன்யாவின் குடும்பம் சமந்தா நடிப்பதை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவர்களது விருப்பத்துக்கு மாறாக சாம் தொடர்ந்து நடித்தார். இதனால் திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் நாளடைவில் பெரிதாகி விவாகரத்தில் முடிந்தது.

மையோசிடிஸ் நோய்: திருமண உறவிலிருந்து வெளியே வந்த அவர் புஷ்பா படத்தி ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதற்கு பிறகு அவரது கிராஃப் உச்சம் சென்றது. இருந்தாலும் அந்த சமயத்தில் மையோசிடிஸ் என்னும் தோல் நோய் அவருக்கு வந்தது. அதன் காரணமாக சினிமாவிலிருந்து விலகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். விரைவில் சமந்தா உடலளவிலும், மனதளவிலும் தேறி பழைய ஃபார்மில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள்.
மீண்டும் ஆரம்பித்த சமந்தா: ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர் சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. அதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட அவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். அது சுமாரான வரவேற்பை பெற்றாலும் சமந்தாவின் நடிப்புக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் காதலில்: இந்நிலையில் பிக்கிள் பால் விளையாட்டில் சென்னை அணியை வாங்கியிருக்கிறார் சமந்தா.அந்த பிக்கிள் பால் போட்டி தற்போது நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் போட்டியை காண்பதற்கு இயக்குநர் ராஜ் நிடிமோருடன் கைகோர்த்தபடி வந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு பேரும் காதலித்துவருகிறார்களோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











