ரசிகர்களுக்கு அடுத்த அதிரடி ரெடி.. மீண்டும் ஹாட் பிக்சர்சை வெளியிட்ட சமந்தா!

சென்னை : நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது.

இதையடுத்து தற்போது அவரது நடிப்பில் யசோதா, குஷி படங்கள் உருவாகி வருகின்றன. விரைவில் இந்தப் படங்கள் ரிலீசுக்கு ரெடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் சமந்தா, அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா 10 ஆண்டுகளை சினிமாவில் கடந்த நிலையிலும் அவரது மார்க்கெட்டை தொடர்ந்து சிறப்பாக வைத்து வருகிறார். கடந்த 2010ல் இவரது நடிப்பில் யே மாயம் சேசாவே என்ற தெலுங்குப் படம் வெளியானது. முதல் படத்திலேயே கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த சமந்தா அதுமுதல் ரசிகர்களின் பேவரைட்டாக மாறியுள்ளார்.

தொடர்ந்து பிசி

தொடர்ந்து பிசி

முதல் படத்திலேயே பிலிம்பேர், நந்தி உள்ளிட்ட விருதுகளையும் இவர் குவித்துள்ளார். தமிழில் இவரது நடிப்பில் கடந்த 2012ல் வெளியானது நீதானே என் பொன்வசந்தம். பானா காத்தாடி, நானி போன்ற படங்கள் இவரது கேரியரை சிறப்பாக ஆக்க உதவிய படங்கள். இதையடுத்து தமிழ், தெலுங்கு என்று சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என நடித்து வருகிறார். விஜய்யுடன் மட்டுமே தெறி, மெர்சல் மற்றும் கத்தி என 3 படங்களில் நடித்துள்ள சமந்தா, அடுத்ததாக தளபதி 67 படத்திலும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய் -சமந்தா கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சமீபத்தில் இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழில் ரிலீசானது. இந்தப் படத்தில் கதீஜா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சமந்தா. இதையடுத்து இவரது நடிப்பில் யசோதா, குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

தன்னுடைய திருமணம், விவாகரத்து முடிவு, சொந்த வாழ்க்கை போன்றவை தன்னுடைய கேரியரை பாதிக்காத வண்ணம், இரண்டையும் சரியாக நடத்தி வருகிறார் சமந்தா. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அவ்வப்போது தனது சொந்த புகைப்படங்கள், வொர்க்அவுட் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படங்கள்

இதேபால அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். நேற்றைய தினம் உள்ளாடையுடன் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகின. இந்தப் புகைப்படங்களுக்கு நடிகைகள் ஹன்சிகா, அனுஷ்கா சர்மா உள்ளிட்டவர்களும் லைக்ஸ் தெரிவித்திருந்தனர்.

அடுத்த அதிரடி

அடுத்த அதிரடி

இந்நிலையில் அடுத்த அதிரடி புகைப்படங்களுடன் களமிறங்கியுள்ளார் சமந்தா. இந்தப் புகைப்படங்களிலும் கவர்ச்சி தூக்கலாக காணப்படுகிறது. இந்தப் புகைப்படங்களுக்கு ராஷி கண்ணா, மெஹ்ரீன் பிர்சாடா போன்ற நடிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் சமந்தாவை 23.8 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X