தேவரகொண்டாவின் படத்தின் பாடலை வெளியிட்ட சமந்தா... லிரிக் வீடியோவிற்கு குவியும் பாராட்டுக்கள்

ஐதராபாத் : விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவின் புஷ்பக விமானம் திரைப்படம் சிறப்பான வகையில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் லிரிக் வீடியோ இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. சமந்தா இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லிரிக் வீடியோவாக இருந்தாலும் இந்த பாடல் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக மாறியுள்ளது.

நடிக்க வந்த சகோதரர்

நடிக்க வந்த சகோதரர்

நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவருக்கு குறிப்பாக இரு மொழிகளிலும் பெண் ரசிகைகள் ஏராளமான அளவில் உள்ளனர். இந்நிலையில் இவரது இளைய சகோதரர் ஆனந்த் தேவரகொண்டாவும் நடிக்க வந்துவிட்டார்.

கீத் சைனி நாயகி

கீத் சைனி நாயகி

தாமோதரா இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டாவின் புஷ்பக விமானம் திரைப்படம் சிறப்பான வகையில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை விஜய் தேவரகொண்டா வெளியிட உள்ளார். படத்தில் ஆனந்த்துடன் கீத் சைனி, சான்வே மேகனா, சுனில், நரேஷ், ஹர்ஷ வர்தன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

வெளியிட்ட சமந்தா

இந்நிலையில் இந்த படத்தின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகை சமந்தா அக்கினேனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அழகான திருமண பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா நன்றி

விஜய் தேவரகொண்டா நன்றி

மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். இதனிடையே பாடலை வெளியிட்டுள்ள சமந்தாவிற்கு விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: movie படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X