நாங்கள்லாம் அப்பவே அப்படி! - சமந்தாவின் அதிரடி ப்ளாஷ்பேக்

By Shankar

கல்லூரி காலங்களில் தான் ஒரு அழகிய ராட்சசியாகவும், யாருக்கும் அடங்காமல் சுட்டித்தனமாகத் திரிந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.

தெலுங்கில் சினிமா, காதல், கிசுகிசுக்களுக்கு பதில் சொல்லுதல் என ஏக பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். பெரிய இயக்குநர் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு பின் சொதப்பியதால், இப்போது யாரும் அழைக்க தயங்குகிறார்கள்.

ஆனாலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதால், கோலிவுட்டை வெல்லும் நம்பிக்கையுடன் இருக்கிறார் சமந்தா.

அவார்ட் வாங்கியாச்சு

அவார்ட் வாங்கியாச்சு

சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில், நான் ஈ (ஈகா) படத்தில் நடித்ததற்காக சமந்தாவுக்கு இரு விருதுகள் கிடைத்தன. இந்த விழாவின் போது தனது இளமைக் காலங்களை நினைவு கூர்ந்தா் சமந்தா.

கல்லூரி நாட்களில்...

கல்லூரி நாட்களில்...

கல்லூரியில் படித்த போது என்னை அழகான ராட்சசி என்றுதான் சொல்வார்கள். யாருக்கும் அடங்க மாட்டேன். செம சுட்டி. பேராசியர்களுக்கு நான் அமைதியான பெண் படிக்கிற பெண். ஆனால் என் தோழிகளுக்கு மட்டுமே எனது உண்மையான முகம் தெரியும். வகுப்பில் சக மாணவிகளை கிண்டல், கேலி என கலாய்க்கும் நான், பேராசிரியர்கள் வந்ததும் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக இருப்பேன்.

தோழிகளுக்கு திட்டு

தோழிகளுக்கு திட்டு

என்னுடைய இந்த நடிப்பால், நான் செய்யும் தப்புகள் என் தோழிகள் மீது விழும். அவர்கள் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். கல்லூரி சுவர் ஏறிக் குதித்து சினிமாவுக்குப் போவது வழக்கம். ஒரு நாள் வாட்ச்மேனிடம் மாட்டிக் கொண்டேன். பிரின்ஸி என்னைக் கூப்பிட்டு, "அமைதியான பெண்ணுன்னு நினைச்சேன். நீயா இப்படி," என்று கண்டித்தார். நிறைய அறிவுரை சொன்னார். அப்புறம் சினிமாவில் வரும் ஹீரோயின் மாதிரி திருந்திட்டேன்.

கல்லூரி காதல்...

கல்லூரி காதல்...

அப்போ காதல் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆனா பசங்க என் பின்னாடி சுத்துறாங்கன்றது தெரியும். அதுவும் ஒரு த்ரில்தானே (சர்தான்.. ஆசிட்டை ஆட்டோவுல வரச் சொல்ற பார்ட்டி போல.. இந்த விஷயத்தில் இவரை ஃபாலோ பண்ணாதீங்க மாணவிகளே!)," என்றார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X