இந்தி 'சிங்கம் 2': காஜலை ஓரங்கட்டிய சமந்தா?
இந்தியில் சிங்கம் வெற்றி வெற்றதையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கின்றனர். இதில் காஜல் அகர்வாலுக்கு பதில் சமந்தா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் படம் ஹிட்டானது. இதைப் பார்த்த பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி அதை இந்தியில் அஜய் தேவ்கன், காஜல் அகர்வாலை வைத்து ரீமேக் செய்தார். அங்கும் வில்லன் நம்ம செல்லம் பிரகாஷ் ராஜ் தான். இந்தி சிங்கம் படத்திற்காக பிரகாஷ் ராஜுக்கு சிறந்த வில்லன் விருது எல்லாம் கிடைத்தது, படமும் ஹிட்டானது.
இந்நிலையில் ஹரி சிங்கம் 2 படத்தை எடுக்க இந்தியிலும் சிங்கம் 2 வருகிறது.

தமிழில் 2 நாயகிகளுடன் சிங்கம் 2
சிங்கம் படத்தில் அனுஷ்கா சோலோ ஹீரோயினாக நடித்தார். ஆனால் சிங்கம் 2 படத்தில் அவருடன் ஹன்சிகாவும் நடிக்கிறார்.

இந்தியிலும் சிங்கம் 2
இந்தியில் சிங்கம் வெற்றி பெற்றதையடுத்து சிங்கம் 2 படத்தை எடுக்கின்றனர். இரண்டாம் பாகத்திலும் ஹீரோ அஜய் தேவ்கன் தான்.

காஜலை ஓரங்கட்டிய சமந்தா?
இந்தி சிங்கம் 2 படத்தில் காஜலை தூக்கி விட்டு சமந்தாவை ஹீரோயினாக போடப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











