சமந்தாவோட முதல் சம்பளம் எவ்ளோ தெரியுமா... ரசிகரோட கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை : நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் முத்திரை பதித்து வருகிறார். திருமணமாகி விவாகரத்து பெற்றும் அவரது மார்க்கெட்டை யாராலும் மற்ற எந்த நடிகையாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவரது நடிப்பில் வரும் 28ம் தேதி காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாக உள்ளது.

முன்னணி நடிகை
நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் இவரது மார்க்கெட் சிறப்பாக அமைந்துள்ளது. விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் தமிழில் நடித்து முன்னணி நடிகையாக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

தெலுங்கில் அறிமுகம்
கடந்த 2010ல் தெலுங்கில் யே மாயா சேசாவே படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவருக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். தன்னுடைய அழகு, திறமை, கவர்ச்சி உள்ளிட்டவற்றால் தொடர்ந்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். திருமணமான போதிலும் அதையடுத்து விவாகரத்து முடிவை அறிவித்த நிலையிலும் இவரது மார்க்கெட்டை யாராலும் எதுவும் செய்துவிட முடியவில்லை.

இந்திய அளவில் முன்னணி
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர் பாலிவுட்டிலும் தி பேமிலி மேன் 2 வெப்தொடர் மூலம் தன்னை சிறப்பான நடிகையாக பாலிவுட்டிலும் நிலை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் ரிலீஸ்
தமிழில் இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சமந்தா இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் சாட் செஷன்
இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டையொட்டி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார் சமந்தா. அப்போது பல கேள்விகளுக்கு சிறப்பான வகையில் பதிலளித்தார். படத்தில் கதீஜா என்ற கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா, ராம்போ மற்றும் கண்மணி என்ற கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

கேரக்டர் குறித்து சமந்தா
இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்தும் சமந்தா வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு எப்போதுமே ரொமாண்டிக் காமெடி கேரக்டரில் நடிக்க பிடிக்கும் என்றும் இந்தப் படத்தில் கதீஜா கேரக்டர் மூலம் அது சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தக் கேரக்டரை அனைவரும் கண்டிப்பாக அனுபவித்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல் சம்பளம் குறித்து வெளிப்படை
இதனிடையே அவரது முதல் சம்பளம் குறித்து மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அப்போது தான் பள்ளிக் காலத்தில் 10வது படிக்கும்போது தன்னுடைய முதல் சம்பளத்திற்கான முதல் செக் 500 ரூபாயை பெற்றதாகவும், ஒரு கான்பரன்சை தொகுத்து வழங்குவதற்காக அது தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற அந்த கான்பரன்ஸ் 8 மணிநேரம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











