சீக்கிரமே கல்யாணம்… குழந்தைகளுடன் செட்டில் ஆகணும்: சமந்தாவின் ப்ளான்
நிறைய படங்களில் நடிக்கணும்... கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நடிகைகளும், அவர்களின் அம்மாக்களும் திட்டமிடுவார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ, சீக்கிரம் திருமணம் கொண்டு குழந்தைகள், குடும்பம் என்று செட்டில் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ச்சியா ஜீவா, சூர்யா, விக்ரம், விஜய், என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் நடிகை சமந்தா.
விஜய் உடனான‘கத்தி' பட ரிலீசுக்காக காத்திருக்கிறார். இது தனக்கு முக்கியமான படம் என்று கூறி வருகிறார் சமந்தா.

திருமணம் அறிவிப்பு
ஏற்கனவே சினிமாவை விட்டு விலக நினைக்கிறேன் என கூறி ரசிகர்களை கலங்க வைத்த சமந்தா அடுத்த அதிரடியாக தனது திருமணம் குறித்து பதில் கூறியுள்ளார்.

குழந்தையும் வேண்டும்
சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தா சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொள்வேன் எனக் கூறி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்குள் திருமணம்
"இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன்.

சீக்கிரமே குழந்தைகள்
அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். எனக்கு 60 வயது ஆகும் போது என்னுடைய குழந்தைக்கு 15 வயது ஆக இருப்பதை நான் விரும்பவில்லை.

நடிப்பதை விடப்போகிறேன்
அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன். அதனால் சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன், " என்றும் சொல்லியிருக்கிறார் சமந்தா.

சொன்னதை செய்வாரா?
இப்படி சொல்லிவிட்டு போனவர்கள் எல்லாம் அக்கா, அண்ணி என்று மறுபடியும் வந்து நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சமந்தா சமர்த்தாக சொன்னதை செய்வாரா?


Click it and Unblock the Notifications











