அவரோட நடிக்கணும்... அவர் படங்களை பாக்கணும்... பாலிவுட் ஹீரோ குறித்து சமந்தா உருக்கம்
சென்னை : நடிகை சமந்தா அக்கினேனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெப்சீரிஸ் தி பேமிலி மேன் 2 சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சமந்தா நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட்டில் தான் நடிக்க விரும்பும் ஹீரோ குறித்து சமந்தா வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
நடிகை சமந்தா அக்கினேனி பானா காத்தாடி மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார். ஏராளமான தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் விளங்குகிறார்.

சிறப்பான வரவேற்பு
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துவந்த சமந்தா, இந்தியில் உருவான தி பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிசில் நடித்துள்ளார். முதல் பாகத்தை காட்டிலும் இந்த பாகம் ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றதற்கு சமந்தாவும் ஒரு காரணம்.
Recommended Video

சமந்தாவின் விருப்பம்
இந்த சீரீஸ் மூலம் தற்போது அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கூடிய விரைவிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தா பாலிவுட்டில் யாருடன் நடிக்க மற்றும் யாருடைய நடிப்பை திரையில் பார்க்க விரும்புகிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ராஜ்குமாருடன் இணைய விருப்பம்
இதற்கு பதிலளித்த சமந்தா, ராஜ்குமார் ராவின் பெயரை தெரிவித்துள்ளார். ராஜ்குமார் சிறப்பான நடிகர் என்றும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் சிறப்பானவை என்றும் கூறியுள்ள சமந்தா, அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து தெரிந்து கொள்ள தான் எப்போதும் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











