அட்லி படத்தில் நான் நடிக்கல.. ஓபனாக சொன்ன சமந்தா.. அந்த பங்காரம் படம் எப்போ வருது தெரியுமா?

சென்னை: நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு பங்காரம் எனும் படத்தில் நடிப்பதாக போஸ்டர் ஒன்று வெளியானது. ஆனால், இதுவரை அந்த படம் ஆரம்பிக்கப்பட்டதற்கான எந்தவொரு தகவலும் இல்லை. நடிகை சமந்தா ஹீரோயினாக படங்களில் நடிப்பதை தாண்டி விளையாட்டு துறைகளில் முதலீடு செய்வது மற்றும் படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து சுபம் எனும் படத்தை தயாரித்துள்ளது என படு பிசியாக தன்னை வைத்துக் கொண்டு வருகிறார்.

ஷாருக்கானின் ஜவான் படத்தை இந்தியில் இயக்கிய அட்லி தனக்கு ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுக இயக்குநர் வாய்ப்பை கொடுத்த நயன்தாராவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். அந்த படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவே மாறியது.

Samantha reveals what her next movie and don t part in Atlee and Allu Arjun movie

இந்நிலையில், அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கவுள்ள படத்தில் நடிகை சமந்தா தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை நடிகை சமந்தாவே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தயாரிப்பாளரான சமந்தா: தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா ஏற்கனவே தனது கணவருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதே போல நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தாவும் புதிதாக 'Tralala Moving Pictures' (த்ராலாலா) எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'சுபம்' எனும் படத்தை தயாரித்து முடித்துள்ளார். பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படம் நாளை (மே 9) திரையரங்குகளில் வெளியாகிறது. தயாரிப்பாளராக சமந்தா சாதிப்பாரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கல: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தியாவே வியக்கும் வண்ணம் ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக உருவாக போகிறது. நடிகை சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கத்தில் தெறி மற்றும் மெர்சல் படங்களில் நடித்த நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை அவரே அறிவித்துள்ளார்.

மிருணாள் தாகூர் நடிக்கிறாரா?: முதலில் பிரியங்கா சோப்ரா பெயர் அடிபட்டது. அதன் பின்னர் அவர் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் தான் சமந்தாவின் பெயர் அடிபட்டது. இந்நிலையில், தற்போது மிருணாள் தாகூர் அல்லது ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

Samantha reveals what her next movie and don t part in Atlee and Allu Arjun movie

பங்காரம் படம் என்ன ஆச்சு?: 'மா இன்டி பங்காரம்' படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக கடைசியாக கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு கையில் துப்பாக்கியுடன் சேலை கட்டிய குடும்பப் பெண்ணாக சமந்தா தெறி போஸ் கொடுத்திருந்தார். ஆனால், கடந்த ஒரு வருடமாக அந்த படம் ஆரம்பிக்கவே இல்லை. தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அந்த படம் உருவாகவுள்ள நிலையில், விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் அதுதான் சமந்தா நடிக்கும் அடுத்த படம் என்கின்றனர். மேலும், அந்த படம் ஆரம்பித்த உடனே ரெடியாகிவிடும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சொந்த தயாரிப்பிலேயே சமந்தா நடிக்கப் போகிறாரா என கேள்விகள் கிளம்பியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X