இது நடிகைகளின் சைக்கிள் வாரம்.. த்ரிஷா ஒரு பக்கம் ஓட்டுறாங்க.. சமந்தா இன்னொரு பக்கம்.. செம சூப்பர்!
சென்னை: நடிகை திரிஷா நியூயார்க் நகரில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்த குஷி திரைப்படம் வெற்றி படம் என ஆரம்பத்திலேயே சக்சஸ் பாட்டி கொண்டாடி இருந்தனர். ஆனால் சாகுந்தலம் படத்தின் தோல்வி அளவுக்கு குஷி இல்லை என்றும் அதைவிட கொஞ்சம் சுமாரான படம் தான் என்றும் படம் வெளியான ஒரு வாரத்திலேயே அதன் ஓட்டம் முற்றிலுமாக முடங்கிவிட்டது அந்த படக்குழுவை அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது.

குஷி ஓடிடி ரிலீஸ்: விஜய் தேவரகொண்டா லைகர் மற்றும் சமந்தாவின் சாகுந்தலம் என இரு நடிகர்களின் முந்தைய படங்களும் போதிய வசூல் செய்யாமல் படுதோல்வியை அடைந்த நிலையில் குஷி திரைப்படம் இருவருக்குமே கொஞ்சம் குஷியை கொடுத்துள்ளது என்கின்றனர்.
அக்டோபர் 1-ஆம் தேதியான நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குஷி வெளியாகிறது. குஷி படத்தின் புரமோஷனை முடித்துவிட்டு நடிகை சமந்தா மீண்டும் அமெரிக்காவுக்கு பறந்து சென்ற நிலையில் அங்கே தனது ஓய்வை உற்சாகமாக கழித்து வருகிறார்.

சைக்கிள் ஓட்டும் சமந்தா: செம கூலாக சமந்தா சைக்கிள் ஓட்டி வரும் வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக நடிகை திரிஷா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை வெளியிட்ட நிலையில், உடனடியாக சமந்தாவும் சைக்கிள் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்து வேறு எந்த நடிகையாவது சைக்கிள் ஓட்டும் வீடியோவை வெளியிடப் போகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
சல்மான் கான் படத்தில்: குஷி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்த சிட்டாடல் வெப் சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பின்னர் நடிகை சமந்தா சல்மான்கான் படத்தில் நடிக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா சிகிச்சை எடுத்து வருவதாகவும் அமைதியான சூழலில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே மீண்டும் பழைய படி சினிமாவில் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











