Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அரியவகை சரும நோய்..சிகிச்சை முடிந்தது? விரைவில் இந்தியா திரும்பும் சமந்தா!
சென்னை : நடிகை சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் விரைவில் இந்தியா திரும்ப உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.
இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார்.
இடுப்புக்கு
கீழே
ஆடையணியாமல்
’வாட்ச்’களை
அணிந்த
பிக்
பாஸ்
நடிகை..
எல்லாம்
நேரம்
என
கடுப்பான
ஃபேன்ஸ்!

க்யூட் தமிழ் பெண்
க்யூட் தமிழ் பெண்ணான சமந்தா விண்ணை தாண்டி வருவாயா படத்திலும் தெலுங்கு ரீமேக்கான ஏம் மாய சேசாவே படத்தில் நடித்திருந்தார். முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரிந்தனர்
மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்களின் வாழ்க்கையில் யாரின் கண்பட்டதோ தெரியவில்லை. இருவரும் இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இருவரின் பிரிவுக்கு காரணம் என்ன என தெரியாததால், சமந்தா குறித்து பலவிதமான வதந்திகள் பரவின.

ஐட்டம் பாடல்
விவாகரத்து முடிவால் மனவேதனையில் இருந்த சமந்தா, மீண்டும் பழைய உத்வேகத்துடன் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலான ஊ சொல்றியா மாமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு தனது மார்க்கெட்டை எகிற வைத்தார். இந்த குத்தாட்ட பாடலுக்கு பிறகு சமந்தாவின் சம்பளம் இருமடங்காக கூடியது.

அமெரிக்காவில் சமந்தா
இதையடுத்து, நடிகை சமந்தா சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்று உள்ளதாகவும், அவர் Polymorphous Light Eruption என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பல வதந்திகள் பரவின. இதுகுறித்து,விளக்கம் அளித்த சமந்தாவின் மேனேஜர் மகேந்திரா, சமந்தா நலமுடன் இருக்கிறார், அவருக்கு எந்தவிதமான உடல் நலப் பிரச்சனையும் இல்லை. தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்து இருந்தார். இருப்பினும் சமந்தா எதற்காக அமெரிக்கா சென்றார் என்ற காரணம் தெரிவிக்கவில்லை

சிகிச்சை முடிந்தது
இந்நிலையில்,நடிகை சமந்தாவுக்கு நல்லபடியாக சிகிச்சை முடித்து விட்டதாகவும், இவர் இந்த மாதத்தில் இந்தியா திரும்பி ஷிவ நிர்வாணா இயக்கும் குஷி படத்தில் மீதமிருக்கும் காட்சியில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசர்பர் 23ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வெளியாக உள்ளது.

பல படங்கள் கைவசம்
மேலும்,யசோதா, சகுந்தலம், ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு வெப் சீரிஸ், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடப்படாத படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.