பாத் டப்பில் சமந்தா... இயற்கையை ரசித்துக் கொண்டு ஆனந்த குளியல்.. ஆடிப்போன பேன்ஸ்!
சென்னை: நடிகை சமந்தா இயற்கை அழகை ரசித்துக்கொண்டு பாத் டப்பில் குளிக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பயணித்து இரண்டு மொழிகளிலும் பெரிய நடிகையாக மாறினார். தமிழில் விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படத்தில் நடித்த இவர், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்: நடிகை சமந்தா, முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமான பிரிந்து விட்டனர். கோடிகளை ஜீவனாம்சமாக கொடுக்க நாகார்ஜுனா தயாராக இருந்தும் 10 பைசா கூட வேண்டாம் என கெத்தாக கூறியுள்ளார் சமந்தா.
கூடுதல் கவர்ச்சி: விவகாரத்திற்கு பின் கவர்ச்சியை தூக்கலாக காட்டத் தொடங்கிய சமந்தா, புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழ், தெலுங்கு ஆடியன்சின் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து, யசோதா, சாகுந்தலம் போன்ற திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தது. இதன் பின் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
சமந்தா சம்பளம்: தற்போது சமந்தா, சிட்டாடல் என்பது ஆங்கில வெப் சீரிஸ் இந்திய பதிப்பில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்றது. இந்த சிட்டாடல் தொடருக்காக சமந்தா 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பாத் டப்பில் சமந்தா: தற்போது ஓய்வில் இருக்கும் சமந்தா தனது ஆடை வடிவமைப்பாளர் க்ரேஷா பஜாஜுடன் பூடானில் ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார். பாத் ரூமில் போட்டோஷுட் நடத்தி உள்ள சமந்தா, பாத் டப்பில் படுத்துக்கொண்டு பூடான் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் தீயாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications











