இரண்டாவது திருமணத்துக்கு பிறகு இப்படியா?.. சமந்தா என்ன அதிரடியா இறங்கிட்டாங்க

சென்னை: நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் கடந்த வருடத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் இரண்டு பேரின் உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வத்தை செலுத்திவருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் அதீத கவனத்தை ஈர்த்தது.

தமிழில் திரை பயணத்தை தொடங்கிய சமந்தா தெலுங்கில் நாக சைதன்யாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து கோவாவில் வைத்து அவர்களது காதல் திருமணத்தில் முடிந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இரண்டு பேரும் சில வருடங்களிலேயே விவாகரத்து செய்தார்கள். அவர்களது விவாகரத்துக்கு ஏகப்பட்ட பேர் பல கதைகளை சொன்னார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் அமைதியாகவே இருந்தார்கள்.

Samantha Ruth Prabhu s Stunning New Photoshoot Leaves Fans Speechless
Photo Credit:

மீண்டும் மலர்ந்த காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சில காலம் சிங்கிளாக இருந்துவிட்டு; நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். இந்தக் காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைத்ததால் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் சமந்தாவும் அதேபோல் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. அவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவை ரகசியமாக காதலித்துவந்தார். ராஜ் நிடிமோருவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
"6 மணிக்குப் பிறகு விஜய் இப்படியா?".. ஷோபா சொன்ன விஷயம் வைரல்

நிம்மதியான வாழ்க்கை: ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டு இரண்டு பேரும் இப்போது நிம்மதியாக வாழ்கிறார்கள். அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில்கூட, ராஜை நீங்கி என்னால் இருக்கவே முடியாது என்று காதலை பொழிந்திருந்தார் சாம். நாக சைதன்யாவுடனான உறவு முறிந்தது போன்று இது நடந்துவிடக்கூடாது எனவும் ரசிகர்கள் இயற்கையை வேண்டிக்கொண்டிருக்கின்றன. ராஜும், சமந்தாவின் அத்தனை செயல்களிலும் பக்கபலமாக இருந்துவருகிறார்.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: திருமணத்துக்கு பின் நடிப்பதிலும் ரொம்பவே கவனம் செலுத்துவதாகவே தெரிகிறது. சில திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார் என்றும்; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தி நாட் என்ற ஆங்கில நாளிதழுக்கு கவுன் உள்ளிட்ட ஆடைகளை அணிந்தும் செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். அவை அனைத்தையும் பார்த்த ரசிகர்களோ அட சமந்தா ஒரு ஹாலிவுட் ஹீரோயினாகவே மாறிட்டாங்களே என்று கமெண்ட்ஸ் செய்து லைக்குகளையும், ஷேர்களையும் குவித்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X