Samantha: மன அமைதி தேடும் சமந்தா.. இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?
சென்னை: நடிகை சமந்தாவுடன் போட்டி போட முடியாமல் நடிகைகள் திணறிய காலம் உண்டு. அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையால் எக்கச்சக்க படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவரது விவாகரத்து மற்றும் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவரால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போனது. தற்போது ஓய்வில் இருக்கும் சமந்தா, ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார். தமிழ்,தெலுங்கு என இரண்டிலும் பிஸியாக நடித்து வந்த சமந்தா, தனது முதல் படத்தில் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்த போதே இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பின் பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகவும் பிரம்மாண்டமாக 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சமந்தா, நாக சைத்தன்யா: இதில் சமந்தா கிறிஸ்டியன் என்பதால் கிறிஸ்துவ முறைப்படியும், நாக சைத்தன்யா இந்து என்பதால், இந்து முறைப்படியும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சிறந்த ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் இருவரும் சேர்ந்து மஜ்லி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாகவும் அமைந்தது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இவர்களின் பிரிவுக்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் எந்த காரணத்திறக்காக பிரிந்தார்கள் என்பது சமந்தா மற்றும் நாகசைத்தன்யாவிற்கு மட்டும் தான் தெரியும்.

உண்மை என்ன: சமந்தாவை பிரிந்த நாகசைத்தன்யா சில மாதங்கள் மன வருத்தத்தில் இருந்தாலும் அதில் இருந்து மீண்டு, தற்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதாக சினிமா வட்டாரத்தில் செய்தி பரவிய நிலையில், அது உண்மை என்பது போல இவர்களின் நிச்சயதார்த்தம் உண்மையில் நடந்தது. திருமணத்திற்காக சடங்குகள் நடைபெற்ற வருகின்றன.

நெகட்டிவ் விமர்சனம்: ஆனால், சமந்தா தனது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு தான் ஆக வேண்டும் என்பதற்காக இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார். இருந்த போதும் அவரைப் பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவுக்கு கே டி ஆர் தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு நாக சைதன்யாவும் தனது கண்டனங்களை தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்காக பொங்கி எழுந்த சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கண்டன பதிவு போட்டு நீதி கேட்டு நீதிமன்றம் வரை சென்றார்.

இயற்கையை ரசிக்கும் சமந்தா: வாழ்க்கையில் தொடர்ந்து போராடி வரும் சமந்தா, விவாகரத்திற்கு பின் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்காக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சமந்தா மன அமைதிக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார். தற்போது ஜெய்பூரில் உள்ள Six Senses Fort Barwaraவில் இருக்கும் சமந்தா அங்கு இயற்கை அழகை ரசித்துக்கொண்டு பொழுதை கழித்து வருகிறார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











