பழனி முருகன் கோவிலில் சமந்தா.. 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினார்!
சென்னை : நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலுக்கு வந்து திடீரென மனம் உருகி பிரார்த்தனை செய்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன்,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

சமந்தா
சமந்தா நடிப்பில் நவம்பர் மாதம் யாசோதா திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த படத்தில் நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக சமந்தா நடித்திருந்தார். தன் தங்கையின் ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாய் ஆகினார். குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் காரணமே இல்லாமல் இறந்து விடுவதால், பதறும் சமந்தா, இறப்புக்கான காரணம் என்ன ஆராயும் போது பல திடுக்கிடும் தகவல்களை தெரிந்து கொள்கிறாள். ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் காட்சிகளுடன் வெளியான இப்படத்தில் சமந்தா பல அதிரடி சண்டை காட்சிகளில் டூப் போடாமல் அதிரடி காட்டியிருந்தார்.

சாகுந்தலம்
யாசோதா திரைப்படத்தைத் தொடர்ந்து ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இயக்கி உள்ள சாகுந்தலம் என்ற புராண இதிகாச காதல் கதையில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிந்த நிலையில் படம் நம்பவர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்த படங்களில்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள சாகுந்தலம் படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் வருண் மற்றும் சமந்தா இருவரும் ஸ்டைலான உளவாளிகளாக நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் சர்வதேச அளவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனம் உருகி பிரார்த்தனை
கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்ட சமந்தா, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 600 படிகட்டுகளிலும் கற்பூரம் ஏற்றி நடந்து வந்து வேண்டுதரை நிறைவேற்றினார். அவருக்கு கோயில் நிர்வாகம் பிரசாதம் வழங்கியது. சமந்தாவுடன் 96 பட இயக்குனர் பிரேம் குமார் மற்றும் சமந்தாவின் நெருங்கிய நண்பர்கள் உடன் இருந்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தேன். தற்போது, கடவுளின் அருள் மருத்துவர்கள் ஆலோசனையால் உடல் நலம் பெற வேண்டுதல்களை நிறைவேற்ற பழனி முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்ததாக கூறினார்.


Click it and Unblock the Notifications











