விவாகரத்தால் மன அழுத்தம்… கோவில் கோவிலாக சுற்றும் சமந்தா!
சென்னை : விவகாரத்து பிரச்சினையால் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா, மன நிம்மதிக்காக ஆன்முக சுற்றுலா சென்றுள்ளார்.
சமந்தா, நாக சைத்தன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடந்தது.
இதையடுத்து, அக்டோபர் 2ந் தேதி, இருவரும், ஒரே நேரத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன் மனைவி வாழ்க்கையில் இருந்து பிரிவதை அறிவித்தனர்.

காதல் திருமணம்
சமந்தாவுக்கும் நாக சைத்தன்யா இருவரும் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் விரைவில் இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று செய்திகள் பரவின. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரிந்தனர்
இதையடுத்து, தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்து விட்டதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். தெலுங்கு சினிமாவின் இருவரின் பிரிவு பற்றி தான் பேசுபொருளாக இருக்கிறது. ஏன் அவர்களுக்குள் விரிசல் என்பதற்கு விடை கண்டுபிடிக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்த பிரீதம் ஜுகல்கர், சமந்தாவை தான் சகோதரியாக பார்ப்பதாகவும், தங்களுக்கு இடையே தவறான உறவு இல்லை என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Recommended Video

ஆன்மீக சுற்றுலாப்பயணம்
விவாககரத்து ஒரு பக்கம்... தவறான வதந்தி ஒரு பக்கம் என மன அழுத்தத்தில் இருந்த சமந்தா தனது நண்பரும் வடிவமைப்பாளருமான ஷில்பா ரெட்டியும் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். ரிஷிகேஷில் உள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார். ரிஷிகேஷில் பயணத்தை முடித்துக்கொண்டு, பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய இடங்களுக்கு சமந்தா ஆன்மீக சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











