ட்விட்டரில் ஆக்டிவா இருப்பாரே? அந்த பிரபல ஹீரோயினுக்கு என்னாச்சு? ரசிகர்கள் திடீர் ஆச்சரியம்!

By

சென்னை: நடிகை சமந்தா திடீரென்று அமைதியாக இருப்பது நெட்டிசன்களை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Recommended Video

Kasthuri praises biggboss Sakshi Agarwal

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. இரண்டு மொழி படங்களிலும் சமமாக நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டு சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ரீமேக்

ரீமேக்

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்திருந்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். இதன் ரீமேக்கில் நடிக்கவில்லை என்றால் வருத்தப்பட்டிருப்பேன் என்று கூறியிருந்தார் சமந்தா.

காத்து வாக்குல

காத்து வாக்குல

ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் அவர் அப்செட் ஆனார். இதையடுத்து தமிழில், விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார். இதில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் இணைந்திருந்த விக்னேஷ், நயன்தாரா, விஜய் சேதுபதி ஜோடி இதில் மீண்டும் இணைகிறது.

த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

இதையடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை அஸ்வின் சரவணன் தமிழ், தெலுங்கில் இயக்குகிறார். இவர், ஏற்கனவே நயன்தாரா, ஆரி, லட்சுமி பிரியா நடித்த 'மாயா', டாப்ஸி, வினோதினி, சஞ்சனா, ரம்யா சுப்ரமணியம் உட்பட பலர் நடித்திருந்த கேம் ஓவர் ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கியவர்.

பயங்கர கேள்வி

பயங்கர கேள்வி

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை சமந்தா. அவரது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தகவல்கள், போட்டோக்களால் நிரம்பும். ஆனால், கடந்த சில நாட்களாக அவர் அமைதியாக இருப்பது நெட்டிசன்களிடையே, பயங்கர கேள்வியை எழுப்பி இருக்கிறது. பொதுவாக சாரிட்டி விஷயங்களில் நடிகை சமந்தா, முன்னணியில் இருப்பார்.

ஏன் அமைதி?

ஏன் அமைதி?

ஊரடங்கு உத்தவரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்ய ஏராளமானோர் முன் வந்துள்ள நிலையில், சமந்தா அமைதி காக்கிறார். அதோடு, கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தெலுங்கு திரையுலகம் அள்ளிக் கொடுத்தபோதும் சமந்தா தரப்பில் இருந்து எந்த சத்தமும் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமந்தாவுக்கு என்னாச்சு? ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X