உணவா? அந்த விஷயமா? சமந்தாவுக்கு எது இல்லாமல் இருக்க முடியாது தெரியுமா? வைரலாகும் த்ரோபேக் வீடியோ!

சென்னை: நடிகை சமந்தாவுக்கு அந்த ஒரு விஷயம் இல்லாமல் வாழவே முடியாது என பேட்டி ஒன்றில் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நட்சத்திர ஜோடிகளாக இருந்த நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்த போது பேசிய பல வீடியோக்களை சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்கள் தேடி அலசி வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா ட்ரூத் ஆர் டேர் போன்ற கேள்விக்கு அதிரடியாக அளித்த பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமந்தா விவாகரத்து

சமந்தா விவாகரத்து

எல்லோருமே அது வெறும் வதந்தி தான் என நினைத்துக் கொண்டிருக்க நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தாங்கள் பிரிவதாக ஒரு மனதாக அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகை சமந்தா தரப்பில் தான் தவறு என்பது போலவும், இல்லை இல்லை நாக சைதன்யா தான் காரணம் என்றும் ஏகப்பட்ட கருத்துக்கள் யூடியூப் வீடியோக்கள் என தொடர்ந்து சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

சமந்தா தான் முதலில்

சமந்தா தான் முதலில்

தனது பெயரில் இருந்து அக்கினேனி எனும் நாக சைதன்யாவின் குடும்ப பெயரை அடக்க முடியாத கோபம் காரணமாக நடிகை சமந்தா தான் முதன்முதலில் தூக்கி எறிந்து இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் என்கிற தகவல் கிளம்ப பிள்ளையார் சுழி போட்டார்.

காதல் கணவர்

காதல் கணவர்

பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் கணவரை திடீரென நடிகை சமந்தா உதறித்தள்ள அப்படி என்ன நேர்ந்தது என்பதை இருவருமே இதுவரை வெளிப்படையாக சொல்லாததால் ஏகப்பட்ட யூகங்கள் பூதங்களாக கிளம்பிக் கொண்டே வருகின்றன. ஆனால், நாக சைதன்யாவை சமந்தா அளவுக்கு யாருமே காதலித்திருக்க முடியாது என்பது அவர் பேசிய பல பேட்டிகள் மூலம் தெரிய வருகிறது.

உணவா? அந்த விஷயமா?

உணவா? அந்த விஷயமா?

இந்நிலையில், நடிகை சமந்தாவிடம் கடந்த 2017ம் ஆண்டு JFW விருது விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேட்டி ஒன்றில் உங்களால் உணவு அல்லது செக்ஸ் இதில் எது இல்லாமல் வாழவே முடியாது என்கிற பதிலை சொல்ல வேண்டும் என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.

சமந்தாவின் பதில்

ட்ரூத் ஆர் டேர் என்கிற அந்த கேள்விக்கு சில விநாடிகள் சிரித்தபடி யோசித்த நடிகை சமந்தா செக்ஸ் என அதிரடியாக பதில் கொடுத்து தனது காதல் வாழ்க்கை எந்தளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை நிரூபித்து இருந்தார். அந்த த்ரோபேக் வீடியோவை தற்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

டிசம்பர் 17

டிசம்பர் 17

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் டிசம்பர் 17ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதே நாளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்திலும் நடிகை சமந்தாவின் அட்டகாசமான குத்தாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட், இங்கிலாந்து படம் என செம பிசியாக மாறி உள்ளார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X