அடுத்த லெவல்.. சர்வதேச திரைப்படத்தில் இருபால் உணர்வு கொண்ட தமிழ் பெண்ணாக நடிக்கும் சமந்தா!
சென்னை: தி ஃபேமிலி மேன் 2வில் நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த நடிகை சமந்தா அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார்.
சர்வதேச திரைப்படமான 'Arrangements of Love' படத்தில் இருபால் உணர்வு கொண்ட தமிழ் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
'Arrangements of Love' எனும் இந்திய நாவலை தழுவி சர்வதேச இயக்குநர் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை சமந்தா.

கணவருடன் விவாகரத்து
கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், நடிகை சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என பறக்க ஆரம்பித்து விட்டார். சிறையில் அடைந்து கிடக்காமல் சிறகை விரித்து அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்கிற அவரது கனவு கைகூடியுள்ளது. சர்வதேச படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சமந்தா.

பாலிவுட்டை தாண்டி
தி ஃபேமிலி மேன் 2 படத்தில் படு போல்டாக உடலுறவு காட்சிகளில் நடித்த சமந்தாவை பார்த்து இந்திய திரையுலகமே ஷாக் ஆனது. பாலிவுட்டில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் சமந்தாவுக்கு கிடைக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதையும் தாண்டி சர்வதேச படத்தில் ஒப்பந்தம் செய்யபட்டு இருக்கிறார் சமந்தா.

சர்வதேச திரைப்படம்
திமெரி என். முராரி என்கிற இந்திய எழுத்தாளர் எழுதிய பிரபல நாவலான Arrangements of Love என்கிற தலைப்பிலேயே உருவாக உள்ள சர்வதேச திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படத்தை இயக்கவுள்ள இயக்குநர் பிலிப் ஜான் என்பவருடன் சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஷேர் செய்து அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பைசெக்ஸுவல் தமிழ் பெண்
இருபால் உணர்வு கொண்ட தமிழ் பெண்ணான அனு எனும் கதாபாத்திரத்தில் மிகவும் போல்டாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது. 27 வயது பெண்ணான அனு டிடெக்டிவ் ஏஜென்சியையும் நடத்தி வருவதாக அந்த நாவலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அந்த நாவலை வாக்க சமந்தா ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Recommended Video

படு போல்டாக
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ஈழத் தமிழ் பெண் ராஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா. அந்த படத்தில் உடலுறவு, பேருந்தில் அவதி படும் பெண் உள்ளிட்ட காட்சிகளில் படு போல்டாக நடித்திருந்த சமந்தா சர்வதேச திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கப் போகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











