தகதக தங்கம் போல் மின்னும் சமந்தா.. ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அந்த சேலையின் விலை என்ன தெரியுமா?

சென்னை: நடிகை சமந்தா சினிமாவில் நுழைந்து 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை முன்னிட்டு நேற்று ஒரு புதிய போஸ்ட்டும், அதனை தொடர்ந்து தங்கம் போல மின்னும் கவர்ச்சி சேலையில் சில புகைப்படங்களையும் போஸ்ட் செய்திருந்தார்.

ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் அந்த புகைப்படங்கள் மீதுதான் விழுந்த நிலையில், சமந்தா தனது 12 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாட அணிந்திருந்த காஸ்ட்லி சேலையின் விலை குறித்த விபரத்தை அறிந்தால் நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க..

மேலும், யசோதா படக்குழுவினருடன் கேக் வெட்டியும் தனது 12 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடி இருந்தார் நடிகை சமந்தா.

ஹாட்னஸ் குயின்

ஹாட்னஸ் குயின்

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், புஷ்பா பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட சமந்தா, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமின் இன்ஸ்டன்ட் ஹாட்னஸ் குயினாக மாறியுள்ளார். நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் பலபேர் ஃபாலோயர்களாக சேர்ந்து வரும் நிலையில், 22 மில்லியன் ரசிகர்களை சேர்த்துள்ளார். ராஷ்மிகா மந்தனா 25 மில்லியன் ஃபாலோயர்களுடன் தென்னிந்திய நடிகைகளில் முன்னிலையில் உள்ளார்.

12 வருஷ ஸ்பெஷல்

12 வருஷ ஸ்பெஷல்

நடிகை சமந்தா சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி 12 வருடங்கள் ஓடிய நிலையில், அதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை போட்டார். மேலும், யசோதா படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் சமந்தா ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.

தகதக தங்கம் போல்

தகதக தங்கம் போல்

மேலும், தங்க நிற சேலையை அணிந்து கொண்டு நகைகள் மற்றும் தலையில் கொண்டை போட்டு அழகாக இருக்கும் புகைப்படங்களையும் தனது ரசிகர்களுக்காக நேற்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். சாம்பியன்ஸ் ஆப் தெலங்கானா விருது நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், அந்த விழாவில் கலந்து கொள்ளவே இப்படியொரு விலை உயர்ந்த சேலையை அணிந்து கொண்டு அந்த விழாவுக்கு சென்றுள்ளார் சமந்தா.

இவ்ளோ காஸ்ட்லியா

இவ்ளோ காஸ்ட்லியா

காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா ஜாகுவின் கை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சேலையின் விலை ரூ. 1,14,999 என அவரது வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகை சமந்தாவின் இந்த சேலை 1.15 லட்சமா என ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் எல்லாமே விலை உயர்ந்தவை என்றும் கூறப்படுகிறது.

கோலிவுட் டு பாலிவுட்

கோலிவுட் டு பாலிவுட்

நடிகை சமந்தா விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். கோலிவுட்டில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. டோலிவுட்டில் சகுந்தலம் படம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக யசோதா படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டிலும் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஓ சொல்றியா மாமா பாடல் ஹிட் அடித்த நிலையில், பல குத்தாட்ட பாடல்களும் சமந்தாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X