தலைவி வேற லெவல்டா.. ஹாலிவுட்டுக்கே தகுதியான ஹீரோயின்.. நடிகை சமந்தாவை அப்படி புகழும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை சமந்தா. வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.
தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நாக சைதன்யா
இப்போது, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார். அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

த்ரிஷா கேரக்டரில்
கடைசியாக, தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தான் ரசித்து நடிப்பதாக சமந்தா கூறியிருந்தார். விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்திருந்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தெலுங்கில் பெறவில்லை.

11 மில்லியன்
லாக்டவுன் காரணமாக சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் 11 மில்லியன் பாலோயர்களைப் பெற்றார். நடிகை பூஜா ஹெக்டே 11 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றிருந்த நிலையில், நடிகை சமந்தாவும் அவ்வளவு பாலோயர்களை பெற்றது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

புகைப்படங்கள்
இது தொடர்பான ஒரு வீடியோ மற்றும் புகைப்படத்தையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சமந்தா. இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவு செய்வது வழக்கம். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பார்கள். கமென்ட்களை தாராளமாகப் பதிவு செய்வார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா புதிய போட்டோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

வெவ்வேறு உணர்வுகள்
வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, ஷில்பா ரெட்டியின் சவால் ஏற்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பக்கங்கள், வெவ்வேறு நிழல்கள், வெவ்வேறு உணர்வுகள் எல்லாம் ஒரே படத்தில் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவர், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் பெர்பக்ட் என்று கூறியுள்ளார்.

ஹாலிவுட் தகுதி
ஒரு ரசிகை சரும பராமரிப்பு பற்றி டிப்ஸ் கேட்டிருக்கிறார். போட்டோ சூப்பர், எந்த சேலஞ்சை நீங்க ஏத்துக்கிட்டீங்கன்னு சொல்லவே இல்லையே என்று சிலர் கேட்டுள்ளனர். ஒருவர் நீங்க ஹாலிவுட்டுக்கு தகுதியான நடிகை, ஆனா தென்னிந்தியாவின் கோகினூர் என்று தெரிவித்துள்ளார். ஒரு நெட்டிசன், தலைவி வேற லெவல்டா என்று கூறியுள்ளார்.

சேலஞ்ச் நல்லாருக்கே
எங்களை போல சாதாரண ரசிகர்களுக்கு ரிப்ளை பண்ண போடக் கூடாதா, போங்க சமந்தா? என்று கேட்டிருக்கிறார்கள் சில பாசக்கார ரசிகர்கள். இந்த சேலஞ்ச் நல்லாருக்கே, செம என்று தெரிவித்துள்ளார் இன்னொருவர். பலர் அவர் அழகை அப்படி வர்ணித்துள்ளனர். நடிகை சமந்தாவின் இந்த புதிய போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











