அய்யய்யோ சமந்தாவுக்கேவா, அப்படின்னா எல்லாமே பொய்யா கோப்ப்பால்!

By Siva

சென்னை: சமந்தா தெரிவித்துள்ளதை பார்த்து எத்தனை நடிகைகள் மனமுடைந்து போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

நடிகைகளுக்கு திருமணம் ஆகும் வரை தான் மார்க்கெட் என்ற கருத்து தென்னிந்திய திரையுலகில் உள்ளது. பாலிவுட்டில் நடிகைகள் திருமணமான பிறகும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணத்தை விடுங்க, குழந்தை பெற்ற பிறகும் அவர்களின் மார்க்கெட் அடி வாங்குவது இல்லை.

இந்நிலையில் தான் தெலுங்கு, தமிழ் திரையுலகில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.( மாற்றம் ஏற்பட்டது என்று இதுநாள் வரை நம்பப்பட்டது).

சமந்தா

சமந்தா

சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் பிசியாக இருப்பதை பார்த்த சில நடிகைகள் சரி திருமணமானால் மார்க்கெட் சரிந்துவிடாது, நாமும் திருமதி ஆகலாம் என்று முடிவு செய்தனர். சமந்தாவை பார்க்கும்போது எங்களுக்கும் நம்பிக்கை ஏற்படுகிறது என்று சில நடிகைகள் தெரிவித்தனர்.

ரங்கஸ்தலம்

ரங்கஸ்தலம்

சமந்தா திருமணத்திற்கு பிறகு நடித்த ரங்கஸ்தலம், மகாநதி ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டாகின. ரங்கஸ்தலம் பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சமந்தாவை பார்த்து வியந்தவர்கள் பலர். கோலிவுட், டோலிவுட் நடிகைகள் திருமதி சமந்தாவை பார்த்து சந்தோஷப்பட்ட நிலையில் அவர் அளித்த பேட்டி பலருக்கு கலக்கத்தை தந்துள்ளது.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

ரங்கஸ்தலம், மகாநதி ஆகிய படங்கள் எனக்கு திருமணம் ஆகும் முன்பே துவங்கப்பட்டவை. ஆனால் எனக்கு திருமணமான பிறகு வெளியிடப்பட்டு வெற்றி பெற்றன. அதனால் திருமணத்திற்கு பிறகு நடித்த படங்கள் என்று நான் கூற முடியாது. திருமணத்திற்கு முன்பு போன்று இப்போது எல்லாம் என்னை தேடி பட வாய்ப்புகள் வருவது இல்லை. என்னை வைத்து என்ன செய்வது என்று இயக்குநர்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன் என்று சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கலக்கம்

கலக்கம்

சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ், மஜிலி ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் நாகசவுர்யா ஜோடியாக நடித்துள்ள ஓ பேபி படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சமந்தா தனக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்திருப்பது பல நடிகைகளை கலக்கம் அடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X