என்ன ஆச்சு சமந்தாவுக்கு... எதுக்கு இப்படி ஒரு பதிவு.. கவலையில் ரசிகர்கள் !

சென்னை : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதை பாதிக்கும் வகையில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சமந்தா, என்னத்தான் படங்களில் பிஸியாக நடித்தாலும் அவர் இன்னும் மனஅழுத்தத்தில்தான் உள்ளார் என்று கருத்துக்கூறி வருகின்றனர்.

மேலும் , சில ரசிகர்கள் அவருக்கு தங்களால் முடிந்த ஆறுதல்களை கூறிவருகின்றனர்.

பல படங்களில் பிஸியாக

பல படங்களில் பிஸியாக

தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர்களில் ஒருவரான சமந்தா பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதே போல யசோதா மற்றும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சகுந்தலம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது

சமந்தா மீண்டு வருகிறார்.

சமந்தா மீண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு நாகசைத்தன்வை பிரிந்து சமந்தா மனஅழுத்தத்தில் இருந்தார். இவர்களின் பிரிவுக்கான காரணம் தெரியாததால் இணையத்தில் சமந்தா குறித்தும் நாகசைத்தன்யா குறித்தும் பலவிதமான வதந்திகள் பரவி வந்தன. மன சோர்விலிருந்து மீள தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றார். தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் சமந்தா.

தோல்வி, இழப்பு, அவமானம்

தோல்வி, இழப்பு, அவமானம்

இந்நிலையில், சமந்தா ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் சுயசரிதை புத்தகத்தை மேற்கொள்காட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த முப்பது ஆண்டுகளில், அனைவரைப்போலும், தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து மற்றும் மரணம் ஆகியவற்றை சந்தித்து இருக்கிறேன். என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது, எனது பணம் பறிக்கப்பட்டது, எனது குடும்பமே நிலைகுலைந்து போனது. ஒவ்வொரு நாளும், எழுந்து ஒரு செங்கலை எடுத்துவைத்தேன். நீங்கள் எந்த பிரச்சினையை சந்தித்தாலும் பரவாயில்லை, மற்றொரு செங்கலை எடுத்துவைக்க மறக்காதீர்கள். ஒரே கேள்வி, நீ எழுந்து அதை வைக்கப் போகிறாயா? இல்லையா என்பது தான் என நடிகர் வில் ஸ்மித் அந்த புத்தகத்தில் எழுதிஇருந்தார்.

கடினமாக உழைக்கவும்

கடினமாக உழைக்கவும்

நடிகர் வில் ஸ்மித்தின் புத்தகத்தின் வரிகளால் ஈர்க்கப்பட்ட சமந்தா, வில்லின் புத்தகத்தின் ஸ்னீக் பீக்கைப் பகிர்ந்து, கடினமாக உழைக்கவும், உங்கள் பின்னடைவுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், சுயமாக சிந்திக்கவும், உங்களை புதுப்பித்துக்கொள்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள். இது ஒரு நகைச்சுவையான, அழகான புத்தகம் என்று சமந்தா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X