உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே.. இன்னாம்மா புஷ் பண்ணி யோகா செய்யுறாரு சமந்தா!
சென்னை: கார்ட்டூன் பொம்மை போட்ட சட்டை போட்டுக்கிட்டு செம க்யூட்டாக தரையில் இருந்து புஷ் பண்ணி முழு உடலையும் மேலே கொண்டு வந்து நடிகை சமந்தா செய்துள்ள யோகா போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் ஒரே நேரத்தில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.
இந்த லாக்டவுனில் தோட்டக் கலை, செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது என கழித்து வரும் சமந்தா தற்போது யோகா புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

இஷா க்ரியா
லாக்டவுன் நேரத்தில் கணவருடன் அதிகப்படியான நேரத்தை செலவிட்டு வரும் நடிகை சமந்தா, அதிகாலையில், தினமும் மறக்காமல் யோகாவையும் செய்து வருகிறார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சமீபத்தில், யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்த நடிகை சமந்தா, 48 நாட்கள் தொடர்ந்து இஷா க்ரியா யோகா செய்யப்போவதாகவும் அறிவித்து இருந்தார்.

தோழிக்கு கொரோனா
சமீபத்தில் சமந்தா தனது தோழியை சந்தித்து விட்டு வந்த நிலையில், அவரது தோழி ஷில்பா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கும் கொரோனா பரவியதா என்ற கேள்விகளும், பாதுகாப்பா இருங்க சமந்தா என்ற ஆதரவு கமெண்ட்டுகளும் சமந்தாவை சுற்றின.

தெறி நட்பு
தெறி, தங்கமகன் படங்களில் எமி ஜாக்சன் உடன் இணைந்து நடித்த நடிகை சமந்தா, சமீபத்தில் அவர் பதிவிட்ட, ஆலோ யோகா போஸுக்கு லைக் போட்டிருந்தார். தளபதி ரசிகர்கள், தெறி படத்தின் நட்பு எப்படி வேலை செய்யுதுன்னு பாருங்க என எமி ஜாக்சனின் அந்த யோகா புகைப்படங்களை வேற லெவலில் வைரலாக்கினர்.

செம புஷ்
இந்நிலையில், தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து, நடிகை சமந்தா தினமும் யோகா செய்வதாகவும், தோட்டக் கலைக்கு பிறகு யோகா செய்வது தான் தனக்கு பிடிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். நாக சைதன்யா க்ளிக்கில் கைகளை தரையில் ஊன்றி, மொத்த உடலையும் செம புஷ் பண்ணி அந்தரத்தில் தூக்கியபடி இருக்கும் சமந்தாவின் இந்த யோகா போஸ் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது.

உன்னாலே முடியாது என்று
சமந்தாவின் இந்த அசத்தலான யோகா போட்டோவிற்கு ரசிகர்கள் மட்டுமின்றி ரகுல் ப்ரீத் சிங், லாவண்யா திரிபாதி போன்ற பல பிரபல நடிகைகளும் ரசிகைகளாக மாறி விட்டனர். லாவண்யா திரிபாதி, "உன்னால முடியாதுன்னு ஏதாவது இருக்கா?" என கமெண்ட் போட்டுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், "இதை பாருங்க" என ஹார்ட்டீன் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











