»   »  கல்யாணம் நடக்கப்போகுது... கவர்ச்சிக்கு நோ சொல்லும் சமந்தா

கல்யாணம் நடக்கப்போகுது... கவர்ச்சிக்கு நோ சொல்லும் சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நாக சைதன்யா உடன் காதலில் விழுந்துள்ள நடிகை சமந்தா விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி சினிமாவில் கவர்ச்சி காட்டப் போவதில்லை என்று இயக்குநர்களிடம் கூறியுள்ளாராம் சமந்தா இதனால் இயக்குநர்களும் தெலுங்கு ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனராம்.

தெலுங்கு படங்களில் தாராள கவர்ச்சியாக நடித்து வந்த சமந்தாவை இனி கவர்ச்சியாக நடிக்க வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டார் கண்டிசன் போட்டுள்ளதால் இப்படி அறிவித்துள்ளார் சமந்தா. படங்களில் நடிப்பதையும் படிப்படியாக குறைத்து வருகிறார் சமந்தா.

சமந்தாவும், நாகசைதன்யாவும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நாக சைதன்யாவின் தாயார் சமீபத்தில் சமந்தாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஒருநாள் முழுவதும் அவருடன் தங்கி இருந்தார். அப்போது சமந்தாவின் நடவடிக்கைகள் அவருக்கு பிடித்து விட்டதால் திருமணத்துக்கு முழு சம்மதத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்த ஆண்டு இறுதியில் சமந்தா-நாகசைதன்யா நிச்சயதார்த்தத்தை நடத்தவும் அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணத்தை நடத்தவும் இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். திரைப்படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதற்கு நாகசைதன்யா குடும்பத்தினர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்ச்சி சமந்தா

கவர்ச்சி சமந்தா

ஏற்கனவே பல படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்தார். சூர்யாவுடன் 'அஞ்சான்' படத்தின் பாடல் காட்சியொன்றில் துணிச்சலாக நீச்சல் உடையில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். சமந்தாவின் கவர்ச்சி நடிப்பு தமிழக ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் சமந்தாவின் தாராள நடிப்பு தொடர்கிறது.

ஜனதா கேரேஜ்

ஜனதா கேரேஜ்

ஜூனியர் என்டிஆருடன் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்துள்ள சமந்தா, கவர்ச்சியை அள்ளி வீசியிருக்கிறாம். இதனால் பல நடிகைகள் ஆடிப்போய் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா.

பாரம்பரிய குடும்பம்

பாரம்பரிய குடும்பம்

நாக சைதன்யா வசதியான பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தாத்தா நாகேஸ்வரராவ் பழம்பெரும் நடிகர். ஹைதராபாத்தில் சொந்தமாக ஸ்டுடியோக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. புகுந்த வீட்டின் கவுரவத்தை காப்பாற்ற இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா.

கவர்ச்சிக்கு நோ

கவர்ச்சிக்கு நோ

தற்போது அவர் நடித்து வரும் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க இயக்குனர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் நாகசைதன்யா குடும்பத்தினர் விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக இயக்குநர்களின் கோரிக்கைக்கு நோ சொல்லி வருகிறார் சமந்தா.

    English summary
    Sources said Samantha has no glamour acting in upcomming movies. Samantha Shows Extreme Glamour In 'Janatha Garage'. Wedding bell ringing in Samantha.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil