சமந்தாவை சுற்றி வரும் வதந்திகள்... லேட்டஸ்ட் மூக்கு ஆபரேசன்?
சமந்தாவை சுற்றி அவ்வப்போது வதந்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. காதல் கிசுகிசு மட்டுமல்லாது அவரது சருமத்தை பற்றி கூட வதந்திகள் பரவின.
மார்க்கெட்டில் இருப்பவர்களைப் பற்றித்தான் வதந்தி அதிகம் பரவும் என்பதை சமந்தாவும் தெரிந்து வைத்துள்ளதால், சமந்தாவும் அதை கண்டு கொள்வதில்லை.
'கத்தி' படத்தின் நாயகியாக சமந்தாவைப் பற்றிய புது வதந்தி
தற்போது திரை உலகில் பரவி வருகிறது. மூக்கு ஆபரேசன் செய்து கொண்டார் சமந்தா என்பதுதான் அது.
'கத்தி' படத்தின் நாயகி சமந்தா அவருடைய மூக்கில் 'கத்தி' வைத்த காரணத்தால்தான் முன்பை விட அழகாய் தெரிகிறாராம். சமந்தா ஏற்கெனவே அழகாகத்தான் இருக்கிறார்.

லண்டன் ஆபரேசன்
சமந்தாவிற்கு அவருடைய மூக்கு அமைப்பைப் பற்றி அவருக்கு திருப்தி இல்லாத காரணத்தால், அதைக் கொஞ்சம் சரி செய்து அழகாக்கிக் கொள்ள லண்டனுக்குச் சென்று ஆபரேஷன் செய்து கொண்டாராம்.சிகிச்சைக்கு பிறகு முன்பை விட அழகாக தெரிந்தார்.

மூக்கு அழகாகும்
டாக்டர்கள் ஆலோசனைப்படி இறுதியாக இன்னொரு முறை மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த அறுவை சிகிச்சை மூக்கை இன்னும் அழகாக்குமாம் இதற்காக விரைவில் சமந்தா லண்டன் செல்கிறாம்.

ஸ்ரீதேவி மாதிரி
அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கியது யார் என்று தெரியவில்லை. ஒரு வேளை மூக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பின்தான் நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் என்ற ராசியை யாராவது சமந்தாவிற்கு சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை

சரும பிரச்சினையா?
சமந்தாவை கடந்த ஆண்டு ஒருநாள் சிலந்தி ஒன்று இவரைக் கடித்துவிட்டதாம். அதனால் ஏற்பட்ட பாதிப்பினால் சருமநோய் ஏற்பட்டதாம். சிலந்தி கடித்த இடம் சமந்தாவின் முதுகு. இதனால் அப்பகுதி முழுவதும் சிவப்பு நிற வளையங்கள் ஏற்பட்டதாம். பயந்து போன இவரது குடும்பத்தார் உடனடியாக உயர் ரக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனராம். இதனால் அவர்,கடல், ஐ பட வாய்ப்புகளைக் கூட இழக்க நேரிட்டது என்று வதந்தி பரவியது.

பொலிவு சிகிச்சை
அதற்கு சமீபத்தில் பதிலளித்த சமந்தா, சரும பொலிவு சிகிச்சைக்காக இருந்த போது மணிரத்னம், ஷங்கர் பட வாய்ப்புகளை தவிர்க்க நேரிட்டதாக கூறினார்.

காதல் கிசுகிசு
சித்தார்த் உடனான காதல் கிசு கிசு பரவும் போதெல்லாம் அதற்கு உடனே பதில் தராத சமந்தா, சமீபத்தில் சித்தார்த் எனது நண்பர் மட்டுமே என்று கூறியிருந்தார். இதேபோல மூக்கு ஆபரேசனுக்கு பதில் தருவாரா சமந்தா.

நடிகைகள் ஆபரேசன்
இதுவரை பல நடிகைகள் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளனர். ஸ்ரீதேவியை அடுத்து பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், ஆகியோர் மூக்கில் ஆபரேசன் செய்துள்ளனர். கங்கனா உதடு ஆபரேசன் செய்துள்ளார். இதேபோல அழகுக்காக சமந்தாவும் ஆபரேசன் செய்து கொண்டாரா? அவர்தான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications











