“ஊ சொல்றியா மாமா“ சமந்தாவின் நடன ஒத்திகை… ரிப்பீட்மோடில் பார்க்கும் ரசிகர்கள் !
சென்னை : இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா பாடலின் ஒத்திகை வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் புஷ்பா.
ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு படத்தின் வெற்றிக்கு காரணமாகி விட்டார்.

புஷ்பா
புஷ்பா படத்தில் இடம்பெற்று இருக்கும் ஊ சொல்றியா மாமா பாடல் இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே ஏய் சாமி பாடல் ஹிட் ஆன நிலையில் ஊ சொல்றியா மாமா பாடல் வெளியாகி இணையத்தை துவம்சம் செய்தது என்று சொல்லலாம்.

குட்டை பாவாடை
குட்டை பாவாடை, ஜாக்கெட்டில்... சமந்தா டான்ஸ் ஆடும் இந்த பாடல் அந்த படத்தின் ஐட்டம் சாங்காக வெளியாகி உள்ளது. தற்போது லிரிக்ஸ் வீடியோ வெளியேறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில், ஆண்ட்ரியாவின் வசீகரமான குரலில் பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.

வசீகரமான குரல்
முக்கியமாக ஆண்ட்ரியாவின் வசீகரமான குரல் காரணமாக பாடல் பலரை கவர்ந்து உள்ளது. இந்த பாடல் தமிழில் பாடலாசிரியர் விவேகா மூலம் எழுதப்பட்டுள்ளது. பாடலில் இருக்கும் வரிகள் ஆண்களை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தன.

ஆட்டம் போடும் ரசிகர்கள்
ஆனால்,புஷ்பா திரைப்படம் திரையில் வெளியானதும் சமந்தா ஆடிய இந்த ஐட்டம் சாங்குக்கு விசிலும் கைதட்டலும் பறந்தது. புகார் தெரிவித்த ஆண்களே இந்த பாடலை ரசித்து கேட்டு ஆட்டம் போட்டு வருகின்றனர்.

ரிப்பீட்மோடில்
இந்நிலையில், ஊ சொல்றியா மாமா பாடலின் ஒத்திகை வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் சமந்தா அந்த பாடலுக்கு ஒத்திகை எடுக்கிறார். அவருடன் இரண்டு பெண்கள் நடனமாடுகின்றனர். இந்த வீடியோவையும் சமந்தாவின் தீவிர ரசிகர்கள் கண் இமைக்காமல் ரிப்பீட்மோடில் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











