வைரலாகும் விவாகரத்து வதந்திகள்.. மீடியாவை கோரமான நாயாக சமந்தா சித்தரிக்க அதுதான் காரணமா?

சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்ததற்கே நடிகை சமந்தாவிற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகளும் கண்டனங்களும் கிளம்பின.

இந்நிலையில், அடுத்த சர்ச்சையில் நடிகை சமந்தா சிக்கி உள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் மீடியாவை கோரமான நாயாக சித்தரித்து சமந்தா பதிவிட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து அக்கினேனியை நீக்கிய நிலையில், அவருக்கும் கணவர் நாக சைதன்யாவுக்கு விவாகரத்தா? என்கிற பேச்சுக்கள் மீடியாக்களில் அடிபட்டன.

மீடியாவை புறக்கணிக்கிறாரா சமந்தா

மீடியாவை புறக்கணிக்கிறாரா சமந்தா

ஆரம்ப காலத்தில் நடிகர்கள் நடிகைகள் வளர மீடியாக்கள் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களின் புகழ் உச்சிக்கு சென்ற பிறகு மீடியாக்களை அவர்கள் புறக்கணிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தாவின் சமீபத்திய நடைமுறைகளும் மீடியாவை அவர் புறக்கணிப்பது போலவே உள்ளதாக தெரிகிறது.

விளக்கம் கொடுக்கவில்லை

விளக்கம் கொடுக்கவில்லை

நடிகை சமந்தா தனது பெயரில் இருந்து அக்கினேனி பெயரை நீக்கிய நிலையில், கணவருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனையா? என மீடியாக்கள் கேள்வி எழுப்பின. ஆனால், இதுவரை வைரலாகும் அந்த வதந்தி தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் சமந்தா இதுவரை கொடுக்கவில்லை.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

நடிகை சமந்தா தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சுமார் 18.4 மில்லியன் ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

சமந்தாவுக்கு கண்டனம்

சமந்தாவுக்கு கண்டனம்

நடிகை சமந்தா ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்திருந்த நிலையில், ஈழத் தமிழர்களை தவறாக சித்தரித்ததாக அந்த வெப்சீரிஸ் மற்றும் அதில் நடித்த சமந்தாவுக்கு எதிராக சீமான் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மன்னிப்பு கேட்ட சமந்தா

மன்னிப்பு கேட்ட சமந்தா

ஆரம்பத்தில் ராஜி கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து பெருமையாக பில்டப் பண்ணி வந்த நடிகை சமந்தா, சமீபத்தில் சிலர் மனதை அந்த வெப்சீரிஸ் பாதித்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் ட்வீட் போட்டு இருந்தார். இந்நிலையில், நடிகை சமந்தாவை சுற்றி அடுத்த சர்ச்சை உருவாகி உள்ளது.

பாலிவுட்டில் பிசி

பாலிவுட்டில் பிசி

அந்த வெப்சீரிஸை தொடர்ந்து மேலும், சில வெப்சீரிஸ்கள் மற்றும் இந்தி பட வாய்ப்புகளும் நடிகை சமந்தாவுக்கு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக மும்பையிலேயே தனியாக வீடு ஒன்றையும் நடிகை சமந்தா வாங்கியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

அமீர் கான் படத்தில் கணவர்

அமீர் கான் படத்தில் கணவர்

டோலிவுட் நடிகரும் நடிகை சமந்தாவின் கணவருமான நாக சைதன்யாவும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய்சேதுபதி நடிக்க விருந்த கதாபாத்திரத்தில் தான் நாக சைதன்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவை சுற்றி

சமந்தாவை சுற்றி

சமந்தா ருத் பிரபு எனும் பெயரை சமந்தா அக்கினேனி என திருமணத்திற்கு பிறகு மாற்றிய நடிகை சமந்தா சகுந்தலம் படத்தில் நடித்து முடித்த நிலையில், 'எஸ்' என தனது ட்விட்டர் ஐடியை மாற்றிக் கொண்டார். அக்கினேனி பெயரை சமந்தா தூக்கியதும் கணவருடன் மோதலா என்கிற ரீதியில் சமந்தாவை சுற்றி ஏகப்பட்ட மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன.

கோரமான நாய்

கோரமான நாய்

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் கோரமான நாய் ஒன்றின் புகைப்படத்தை ஷேர் செய்து அதற்கு கீழ் மீடியா எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாதாரண நாய்க்குட்டிகளின் போட்டோக்களை போட்டு ரியாலிட்டி எனக் கூறியுள்ளார். முன்னதாக வதந்திகளுக்கு ரியாக்ட் செய்யக் கூடாது என்கிற தத்துவத்தையும் சமந்தா ஷேர் செய்திருந்தார்.

தேவையில்லாத வேலை

தேவையில்லாத வேலை

நடிகை சமந்தா இப்படி மீடியாக்களை வம்பிழுப்பது தேவையில்லாத வேலை என்று சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சமந்தா மற்றும் நாக சைதன்யா விவகாரம் குறித்து அதிகளவில் பதிவிட்ட தெலுங்கு மீடியாவை அப்படி சொல்கிறாரா சமந்தா? என்கிற ரீதியில் கண்டனங்களும் குவிய ஆரம்பித்துள்ளன.

விஜய்சேதுபதி படத்தில்

விஜய்சேதுபதி படத்தில்

சகுந்தலம் திரைப்படத்தை முடித்து விட்ட நடிகை சமந்தா புதுச்சேரியில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்ட வெப்சீரிஸ் ஒன்றிலும் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X