செம ஸ்டன்னிங் சமந்தா.. ஜிப் வைத்த பிளாக் டிரெஸ்சில் என்ன ஒரு ஹாட் போஸ்.. வாய் பிளக்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை சமந்தா கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து நடத்திய கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.
கோவாவில் நடைபெற்று வரும் 52வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி உள்ளது.
அந்த விழாவில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகை சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டன்னிங் சமந்தா
கருப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு நடிகை சமந்தா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளன. பல லட்சம் லைக்குகளை சமந்தா பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த புகைப்படங்கள் அள்ளி உள்ளன.

ஜிப் வைத்த டிரெஸ்
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட் போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை பதிவிட்டு வரும் நடிகை சமந்தா கருப்பு நிற டாப்ஸ் முழுவதும் ஜிப் வைத்தது போல ஹாட்னஸை கிளப்பும் உடையை அணிந்து கொண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளன.

தென்னிந்தியாவிலேயே முதல் நடிகை
கோவாவில் இன்று தொடங்கி உள்ள 52வது சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்ற நடிகை சமந்தாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல் நடிகையாக சமந்தா இந்த விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவுக்காகத் தான் இப்படி அட்டகாசமாக டிரெஸ் செய்து கொண்டு சமந்தா கிளம்பியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லா புகழும்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்ற பல பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை சமந்தாவும் உரையாற்றப் போவது தென்னிந்திய ரசிகர்களை பெருமை கொள்ளச் செய்துள்ளது. இந்த புகழுக்கு காரணமே சமந்தா நடித்த இந்தி வெப்சீரிஸ் தி ஃபேமிலி மேன் 2 தான். அந்த வெப் தொடரின் நாயகன் மனோஜ் பாஜ்பாயும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

பாலிவுட் என்ட்ரி
நடிகை சமந்தா விரைவாகவே சில பாலிவுட் படங்களில் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. நடிகை டாப்சியின் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படத்திலும் அவர் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அவரது பாலிவுட் என்ட்ரி தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











