அட இப்படி கூட ஒர்க்அவுட் பண்ணலாமா... புது ரூட் போட்ட சமந்தா... என்ன செய்தாலும் டிரெண்டிங் தான்

சென்னை : சமந்தா என்ன செய்தாலும் டிரெண்டிங் என ஆகி விட்டது. இப்போது அவர் வித்தியாசமாக ஒர்க்அவுட் செய்துள்ள வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக இருக்கும் சமந்தா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கணவர் நாகசைதன்யாவுடன் விவாகரத்தை அறிவித்த பிறகு தொடர்ந்து தலைப்பு செய்திகளில் அடிபட்டு வருகிறார் சமந்தா. அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய சமந்தா தற்போது படம் பற்றிய அறிவிப்பாக இருந்தாலும் சரி, சோஷியல் மீடியாவில் என்ன போஸ்ட் போட்டாலும் அது டிரெண்டிங் ஆகி வருகிறது.

முணுமுணுக்க வைத்த ஊம் சொல்றியா மாமா

முணுமுணுக்க வைத்த ஊம் சொல்றியா மாமா

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு அயிட்டம் சாங் ஆடி, அந்த பாடலை செம ஹிட் ஆக்கி விட்டார் சமந்தா. ஆரம்பத்தில் எதிர்ப்புக்களையும், விமர்சனங்களையும் சந்தித்த இந்த பாடல் பிறகு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி ரசித்த பாடலாக மாறி விட்டது. ஊம் சொல்றியா மாமா பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஆனது. தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

12 ஆண்டுகளை கடந்த சமந்தா

12 ஆண்டுகளை கடந்த சமந்தா

இதைத் தொடர்ந்து தெலுங்கில் சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் தான் திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை யசோதா பட செட்டில் கேக் வெட்டி கொண்டாடினார் சமந்தா. இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. படங்களுடன் அடிக்கடி தான் ஒர்க் அவுட் செய்த வீடியோக்களை வெளியிடுவதும் சமந்தாவின் பழக்கம்.

அட இப்படி கூட செய்யலாமா

அட இப்படி கூட செய்யலாமா

வித்தியாசமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை சமந்தா தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், Trainer நீண்ட கம்பு ஒன்றை வைத்து சமந்தாவை டச் பண்ண முயற்சி செய்கிறார். ஆனால் அந்த கம்பு தன் உடலில் படாமல் வளைந்து நெளிந்து எஸ்கேப் ஆகிறார் சமந்தா. வித்தியாசமான முறையில் அவர் செய்துள்ள இந்த ஒர்க்அவுட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் ரொம்ப சீரியசாக ஒர்க் அவுட் செய்து வரும் சமயத்தில், அதையே எப்படி ஜாலியாக செய்வது என காட்டி விட்டாரே சமந்தா என பலரும் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!
சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்

சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்

சமீபத்தில் ஜம்ப் அப் ஒர்க்அவுட் செய்து அதை சேலஞ்சாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்த சேலஞ்சை செய்ய தயாராவதாக பலரும் முன் வந்து, அதை முயற்சியும் செய்து பார்த்தனர். தொடர்ந்து சமந்தா இது போல் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X