வாழ்வை மாற்றியதற்கு நன்றி.. ராஜ் நிடிமோருவின் பிரச்னை.. சமந்தா ஓபன் டாக்.. இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன்பு கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் இரண்டு பேரின் உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்து சொல்லிவரும் சூழலில் சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நாக சைதன்யாவுடன் தெலுங்கு படத்தில் நடித்தபோது அவருக்கும் சமந்தாவுக்கும் ஏற்பட்ட காதல் வீட்டு சம்மதம் கிடைத்ததால் கோவாவில் வைத்து திருமணத்தில் முடிந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இரண்டு பேரும் சில வருடங்களிலேயே விவாகரத்து செய்தார்கள். அவர்கள்து விவாகரத்துக்கு ஏகப்பட்ட பேர் ஏகப்பட்ட கதைகளை சொன்னார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் அமைதியாகவே இருந்தார்கள்.
மீண்டும் மலர்ந்த காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சில காலம் சிங்கிளாக இருந்துவிட்டு; நடிகை சோபிதா துலிபாலாவை காதல் செய்தார். இந்தக் காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைத்ததால் அவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடந்து முடிந்தது. சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் சமந்தாவும் அதேபோல் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. அவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்துவந்தார்.

இரண்டாவது திருமணம்: ராஜ் நிடிமோருவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரும் தங்களது காதல் பற்றி பொதுவெளியில் மூச்சுக்கூட விடவில்லை. சூழல் இப்படி இருக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டு பேரும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். இதில் உறவினர்களும் நெருக்கமான நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
குவிந்த வாழ்த்து: சமந்தா சிவப்பு நிற பட்டு புடவையிலும், ராஜ் நிடிமோரு சந்தன நிற குர்தாவிலும் ஜொலித்தார்கள். மேலும் சமந்தாவுக்கு விலையுயர்ந்த வைர மோதிரம் ஒன்றையும் ராஜ் அணிவித்தார். முதல் திருமண வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மாதிரி இந்தத் திருமண வாழ்விலும் சமந்தாவுக்கு இருக்கக்கூடாது என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். சினிமா செலிபிரிட்டிகளும் தங்கள் வாழ்த்து மழையை தூவினார்கள்.
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகள் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஷில்பா என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர், "எனது வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி. என்னுடைய மிகப்பெரிய பரிசுக்கும் நன்றி. அந்த 15 நிமிட தியானம் எனது வாழ்க்கையையே மாற்றியது" என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து, "அவரது பிரச்னை நீங்கள்தான் என்பதை உணரும் தருணம்" என்று ஜாலியாக கேப்ஷன் போட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











