புறாவின் சுதந்திரம்கூட கிடைக்காமல் ஏங்கும் யசோதா... சமந்தா படத்தின் புதிய கிளிம்ப்ஸ்!
ஐதராபாத் : நடிகை சமந்தா நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது யசோதா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை சந்திக்க காத்திருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தன்னுடைய திருமணம், விவாகரத்து முடிவு உள்ளிட்ட எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் தொடர்ந்து பார்த்துக் கொள்கிறார். திருமணத்திற்கு பிறகே அவருக்கு சிறப்பான படங்கள் பல அமைந்தன. தி பேமிலி மேன் 2 தொடரிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்தியிலும் ரசிகர்கள்
ஆனால் இந்த வெப் தொடரில் அவரின் கேரக்டரே அவரது விவாகரத்துக்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது வேறு விஷயம். ஆனால் அந்தக் கேரக்டரில் அவர் தனி முத்திரை பதித்து இந்தியிலும் ஏராளமான ரசிகர்களை தற்போது பெற்றுள்ளார். அடுத்தடுத்த தொடர்களில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கதீஜா கேரக்டர்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் அவர் இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தல் கதீஜா என்ற கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார். இந்தக் கேரக்டர் அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

ரிலீசுக்கு காத்திருக்கும் யசோதா
நயன்தாராவை இந்தப் படத்தில் சமந்தா தன்னுடைய நடிப்பின்மூலம் பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தமிழ், தெலுங்கில் அவரது யசோதா படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ளது. இயக்குநர்கள் ஹரி -ஹரீஷ் இந்தப் படத்தை இணைந்து இயக்கியுள்ளனர்.

யசோதா படத்தின் கிளிம்ப்ஸ்
முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. சுதந்திரத்தை வேண்டும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

அழகான சமந்தா
மிகவும் அழகாக இந்த கிளிம்ப்ஸ் காட்சிகள் காணப்படுகின்றன. படத்திற்கான எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. இதனிடையே, படத்தில் இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் உள்ளதாக தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். படத்தில் மேலும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

சமந்தா அர்ப்பணிப்பு
படத்தில் சமந்தாவின் கேரக்டர் மற்றும் அவர் அதை வெளிப்படுத்திய விதம், கேரக்டருக்காக அவரது அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது என்றும் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

5 மொழிகளில் ரிலீஸ்
சமந்தா தற்போது பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். இதையடுத்து யசோதா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











