யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.. இப்போதுதான் சுதந்திரம்.. ஓபனாக பேசிய சமந்தா

சென்னை: சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை பிரிந்த நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்திருக்கிறார். இருவரது திருமணமும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்தச் சூழலில் சமந்தா அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா கடைசியாக தூதா என்ற வெப் சிரீஸில் நடித்தார். அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இப்போது அவர் தண்டெல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கை சைதன்யாவுக்கு இருக்கிறது.

சமந்தாவுடன் நாக சைதன்யா பிரிவு: இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை காதலித்தார் சைதன்யா. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களது திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த அவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டு விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்கள்.

சோபிதாவுடன் திருமணம்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவந்தார். அவர்கள் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால் இரண்டு பேருமே தங்களது காதலை பொதுப்படையாக அறிவிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

Samantha says she is now free Here are Full Details
Photo Credit:

சமந்தாவின் நிலைப்பாடு: நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் இதுவரை சமந்தா திருமணம் செய்துகொள்ளவில்லை. அதேசமயம் இயக்குநர் ராஜுவை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில்கூட ராஜுவுடன் துபாய்க்கு சென்றிருந்தார் சாம். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகின. எனவே கண்டிப்பாக இரண்டு பேரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமந்தா பேட்டி: இந்நிலையில் சமந்தான் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் இப்போது வெற்றியை சுதந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன். இரண்டு வருடங்களாக எனது திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. வளர்ச்சி அடைவதும், முதிர்ச்சி அடைவதும்தான் சுதந்திரம். முக்கியமாக ஒரு பெட்டிக்குள் அடைபடாமல் இருப்பதே சுதந்திரம் என்பது இப்போது எனக்கு புரிந்திருக்கிறது.

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை: நான் முன்புபோல் இப்போது வெற்றி பெறவில்லை என்று என்னை சுற்றி இருப்பவர்கள் நினைக்கலாம். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அதிக வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் எஆன் எழுந்திருக்கும்போது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். ஏனென்றால் நன் செய்யும் பல வேலைகள் எனக்கு நிம்மதியை தருகின்றன" என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. முன்னதாக சமந்தா தயாரித்திருந்த சுபம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X