சமந்தா காலையில் எழுந்தது முதல் ராத்திரி வரை என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க.. அவரே வெளியிட்ட வீடியோ!

சென்னை: சமந்தாவுடன் ஒரு நாள் என நடிகை சமந்தாவே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சமந்தா.

ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அந்த காதல் திருமணம் செட்டாகவில்லை என்பதால் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தனர். ஜீவனாம்சம் கூட தேவையில்லை என சமந்தா நாகை சைதன்யாவை விட்டு விலகி விட்டார்.

samantha thalapathy 69 heroine 69

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா நிச்சயம் செய்துக் கொண்ட நிலையில், இதனால் தான் சமந்தாவை அவர் விவாகரத்து செய்தார் என பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. ஆனால், மறுதிருமணம் குறித்து இதுவரை யோசிக்காத நடிகை சமந்தா தினமும் தனது வாழ்க்கை எப்படி எல்லாம் போகிறது என்பது குறித்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்

காலையில் இதைத்தான் பண்ணுவேன்: தினமும் காலை எழுந்தால் 6.30 மணிக்கு சூரிய உதயத்தை பார்த்து உடலுக்கு தேவையான வைட்டமின்களை எடுத்துக் கொள்வேன். அதன் பின்னர், ஆயில் புல்லிங் செய்வேன். 7 மணிக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வேன். அதன் பின்னர் கடவுளுக்கு விளக்கேற்றி வழிபடுவேன். காரில் செல்லும் போது கண்களை பாதுகாத்துக்கொள்ள சிகிச்சை செய்துக் கொள்வேன். 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன்.

samantha thalapathy 69 heroine 69

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்கள்: 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சமந்தா சென்ற பின்னர் ஐஸ் பவுலில் முகத்தை உள்ளே விட்டு கழுவி ஃபிரெஷ் ஆகிவிடுவார். அதன் பின்னர், மேக்கப் போடப்பட்டு ஷூட்டிங் நடைபெறும் என காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

மாலை நேர சிகிச்சைகள்: மாலை 6 மணிக்கு ரெட் லைட் தெரபி எடுத்துக் கொள்வேன். 7 மணிக்கு பிக்கல் பந்து விளையாட்டை விளையாடி மகிழ்வேன். இரவு 9.30 மணிக்கு தியானம் செய்வேன். அதன் பின்னர் 10 மணிக்கு உறங்க சென்றுவிடுவேன் என நடிகை சமந்தா ஒரு நாள் முழுவதும் தான் என்னவெல்லாம் செய்வேன் என்பதை வீடியோவாகவே வெளியிட்டுள்ளார். நடிகைகள் தங்கள் அழகை பராமரிக்கவும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டி இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அப்போ உணவு?: நடிகை சமந்தா வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் அவர் காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு எடுத்துக் கொள்வது குறித்து காண்பிக்கவே இல்லை. ரசிகர்கள் அனைவரும் சாப்பிடாமலே சமந்தா கஷ்டப்பட்டு தனது உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்கிறாரா? என்றும் இவ்வளவு சம்பாதித்தும் சாப்பிடவில்லை என்றால் எதுக்கு இதெல்லாம் என்றும் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர். சாப்பிடுவதை காண்பித்தால் நீங்கள் எல்லாம் கண் வைத்து விடுவீர்கள் என்று தான் சமந்தா அதையெல்லாம் காட்டவில்லை என்றும் கூறுகின்றனர்.

தளபதி 69ல் சமந்தாவா?: நடிகை சமந்தா தொடர்ந்து இந்தி படங்களில் நடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார். ஆனால், இதுவரை சமந்தா எந்தவொரு பெரிய படத்திலும் கமிட் ஆனதாக தகவல்கள் வெளியாகவில்லை. பங்காரம் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிற அப்டேட்களும் வெளியாகவில்லை. ஆனால், எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 69 படத்தில் சமந்தா தான் ஹீரோயின் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

samantha thalapathy 69 heroine 69

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X