கணக்குல நூற்றுக்கு நூறு.. மறுபடியும் தனது மார்க் ஷீட்டை வெளியிட்ட சமந்தா.. எல்லாம் அதுக்குத்தானா?
சென்னை: நடிகை சமந்தா தனது பத்தாம் வகுப்பு மார்க் ஷீட்டை மறுபடியும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை சமந்தா.
கடைசியாக 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்துள்ளார்.

ஓடவில்லை
ஆனால், அந்த படம் சமந்தா எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தமிழில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பு மேஜிக்குக்கு கிடைத்த வெற்றி, பிரேம் குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘ஜானு' படத்திற்கு கிடைக்கவில்லை. சர்வானந்துக்கு ஜோடியாக சமந்தா அந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராணாவின் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பு
லாக்டவுனுக்கு முன்பிருந்தே நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளார் என்ற வதந்தி கொரோனா வைரஸை விட வேகமாக பரவியது. அந்த நெருப்புக்கு மேலும், எண்ணெய் ஊற்றுவது போல சமூக வலைதளங்களில் போட்டோ போடாமல் இருந்தார் சமந்தா. சமீபத்தில் நடைபெற்ற நடிகர் ராணா - மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்தத்தில் வெளியே தோன்றி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சமந்தா பூஜா ஹெக்டே சண்டை
சமூக வலைதளத்தில் மீண்டும் பழையபடி சமந்தா ஆக்டிவாக ஆரம்பித்த உடனே, பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கும் நடிகை சமந்தா ரசிகர்களுக்கும் இடையே சண்டை தொடங்கியது. சமந்தா ஒன்று அழகு இல்லை என ஹேக் செய்யப்பட்ட பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா பக்கத்தில் போடப்பட்ட பதிவே இருவரது ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட காரணமாக அமைந்தது.

மெளனம்
ரசிகர்கள் சண்டை இவ்வளவு பெருசாக ஆனபோதும், இந்த விவாகரம் தொடர்பாக, பூஜா ஹெக்டேவோ, நடிகை சமந்தாவோ எந்தவொரு அறிவிப்பும் விடாமல், அமைதியாக மெளனம் காத்து வருகின்றனர். ரசிகர்கள் சண்டை தான் நடிகர்களின் மார்க்கெட்டுக்கு துணை என இவர்களும் உணர்ந்து கொண்டார்களா? இல்லை இருவருக்குள்ளும் உண்மையிலேயே பனிப்போர் நிகழ்கிறதா என்பது மர்மமாகவே இருக்கிறது.

பத்தாம் வகுப்பு மார்க் ஷீட்
இந்நிலையில், நடிகை சமந்தா, இந்த லாக்டவுனில் நான் என்ன கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா, இது தான் என் பத்தாவது மார்க் ஷீட் என தனது மதிப்பெண் பட்டியலை இன்ஸ்டா ஸ்டோரிஸில் வைத்துள்ளார். கணக்கில் 100 மதிப்பெண்களும், பல பாடங்களில் 90 மதிப்பெண்களுக்கும் அதிகமாக சமந்தா பெற்றுள்ளார். நீங்க படிப்ஸா என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த பிரச்சனையை மறைக்கவா
ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டே நடிகை சமந்தா தனது 10ம் வகுப்பு மார்க் ஷீட், பதினோராம் வகுப்பு, பி.காம் டிகிரி என அனைத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது மீண்டும் இதனை போட்டு ஏன் வைரலாக்குகிறார். பூஜா ஹெக்டேவின் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இப்படி செய்கிறாரா என்ற சந்தேகம் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











