Samantha: தோழியுடன் நீச்சல் குளத்தில் உற்சாக போஸ்.. சமந்தா இப்ப எந்த நாட்டில் இருக்காங்க தெரியுமா?
சென்னை: நடிகை சமந்தா தற்போது சிகிச்சை காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார்.
உடல் நலத்தில் அதிக அக்கறையுடன் காணப்படுகிறார் சமந்தா. ஆனாலும் சமூக வலைதளங்களில் அவரை அதிகமாக ஆக்டிவாக பார்க்க முடிகிறது.

தற்போது பூடானில் தன்னுடைய தோழியுடன் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ள சமந்தா அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
நடிகை சமந்தா: நடிகை சமந்தா தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பதுடன் இந்தியிலும் வெப் தொடர்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பு காரணமாக 6 மாதங்கள் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ள சமந்தா, தற்போது சினிமாவில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்த புகைப்படங்களையும் அவர் முன்னதாக பதிவிட்டிருந்தார்.
சினிமாவில் இருந்து இடைவெளி: இந்நிலையில் மயோசிட்டிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும்வகையில் சினிமாவில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் இவரது போட்டோஷுட் புகைப்படங்களை காண முடிந்தது. தன்னுடைய க்ளோத்திங் பிராண்டையும் விளம்பரப்படுத்தும் வகையில் தீபாவளிக்கு முன்னதாக சமந்தா அடுத்தடுத்த புகைப்பட சூட்களை எடுத்து பதிவிட்டிருந்தார்.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்: தன்னுடைய உடல்நலத்தில் மிகுந்த அக்கறை காட்டிவரும் சமந்தா, அடுத்தடுத்த பிட்னஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார். இவர் மேற்கொள்ளும் கடினமான உடற்பயிற்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை மட்டுமில்லாமல் உத்வேகத்தையும் அளித்து வருகின்றன. அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் தன்னை அதிகமான ஈடுபடுத்தி வருகிறார் சமந்தா. சமீபத்தில் மாலத்தீவில் இருந்து தன்னுடைய விடுமுறை கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.
பூடானில் விடுமுறை கொண்டாட்டம்: இந்நிலையில் தற்போது பூடானில் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளார் சமந்தா. அவருடன் அவருடைய தோழியும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தன்னுடைய தோழியுடன் பூடானில் உள்ள ஹோட்டலில் நீச்சல் குளத்தில் இருக்கும்படியான புகைப்படத்தை சமந்தா தற்போது வெளியிட்டுள்ளார். சமந்தா மற்றும் அவருடைய தோழி இருவரும் தங்களது பின்புறத்தை காட்டியபடி இந்தப் புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.
ஆக்டிவான சமந்தா: சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் சிட்டாடல் வெப் தொடர் உருவாகியுள்ளது. முன்னதாக தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தாவை இயக்கியிருந்த ராஜ் மற்றும் டிகே இந்த வெப் தொடரையும் உருவாக்கியுள்ளனர். மேலும் சென்னை ஸ்டோரீஸ் என்ற படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார். தற்போது சிகிச்சையில் இருந்தாலும் மிகவும் ஆக்டிவாகவே சமந்தா காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











