Samantha - சினிமாவிலிருந்து ஓய்வெடுத்த சமந்தா.. வீட்டுக்கு வந்த புதுவரவு
சென்னை: Samantha (சமந்தா) சமந்தா புதிய பூனைக்குட்டியை வாங்கி அதற்கு கெலட்டோ என்று பெயரிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகியுள்ளது.
சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

சமந்தாவுக்கு வந்த நோய்: திருமண வாழ்க்கை முறிவுக்கு பிறகு சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது. இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.
நடிப்பில் கவனம்: நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் முழு வேகத்தில் படங்களில் கமிட்டானார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. பத்து கோடி ரூபாய்கூட அந்தப் படம் வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. சாகுந்தலம் தோல்வி அடைந்ததால் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமந்தா.
சிட்டாடல்: இதற்கிடையே ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் இந்திய வெர்ஷனில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க கமிட்டானார். அதற்கான ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வெப் சீரிஸை அதனை ராஜ்& டிகே இயக்குகின்றனர். சமந்தாவுடன் வருண் தவான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஓய்வு: நோயிலிருந்து மீண்ட சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்த்த சூழலில் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து; கமிட்டான படங்களுக்கான அட்வான்ஸையும் திருப்பி கொடுத்துவிட்டார். தனது உடல்நலத்தில் கவனம் செலுத்துவதற்காகத்தான் சமந்தா இந்த ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார் என்று கருதப்படுகிறது.
புதுவரவு: சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் சமந்தா சமீபத்தில் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அது தொடர்பான புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார். அதில் ஒரு பூனைக்குட்டியுடன் இருக்கிறார் அவர். அந்தப் பூனைக்குட்டிக்கு கெலட்டோ என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்ச நாட்கள் ரிலாக்ஸாக இருந்துவிட்டு உடல்நலத்தை தேற்றி மீண்டும் பழைய சமந்தாவாக வாருங்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











