மசாஜ் செய்து மஜா பண்ணும் சமந்தா.. ஆஸ்திரேலியாவில் ஏராளமான அன்பு வந்து குவியுதே.. செம போஸ்ட்!
சென்னை: நடிகை சமந்தா சென்னையிலிருந்து திடீரென ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னிக்கு கிளம்பி சென்றுள்ளார். அங்கே சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட அவர், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட வீடியோக்களையும் உடற்பயிற்சி செய்வது, மசாஜ் செய்வது உள்ளிட்ட காட்சிகளையும் ஒரே போஸ்ட்டில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தனது பக்கம் ஈர்த்துள்ளார்.
37 வயதாகும் நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் போல இவரும் மீண்டும் திருமணம் செய்துக் கொள்வாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வரும் சூழலில், அடுத்தடுத்து வேலைகளிலும் டூர் அடிப்பதிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

சோலோவாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் அன்பை பெற்று வருகிறார்.
ரொம்ப டல் ஆகிட்டாரு: நடிகை சமந்தாவுக்கு மயோசைடிஸ் பாதிப்பு வந்த பிறகு அவரது இளமை மற்றும் அழகு ரொம்பவே குறைந்து போய் விட்டதாகவும், முன்பு இருந்தது போல அவர் இப்போ எனர்ஜியாக இருந்தாலும் அந்த பழைய அழகு சமந்தாவிடம் இருந்து ரொம்பவே மிஸ்ஸிங் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பழையபடி சமந்தா வரவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தொடர்ந்து அதற்காக தன்னை தயார்ப்படுத்தி வருகிறார் சமந்தா.
தொடர் தோல்வி: விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சமந்தா கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் அவர் நடித்த யசோதா திரைப்படம் வெற்றிப் படமாக மாறியது. ஆனால், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. கடைசியாக சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு பங்காரம் படத்தில் அவர் நடித்து தயாரிப்பதாக போஸ்டர் மட்டும் வெளியானது. அந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் அதன் பின்னர் வெளியாகவில்லை.

மசாஜ் செய்து மஜா: நடிகை சமந்தா முன்னதாக ஹாட் பாத் எடுக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர், சமந்தாவின் குளியல் புகைப்படம் என சில டீப் ஃபேக் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில், நடிகை சமந்தா சிட்னியில் மசாஜ் செய்துக் கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் வெளியிட்டுள்ளார்.
வெறித்தனமான வொர்க்கவுட்: முன்பை போலவே தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க நடிகை சமந்தா தொடர்ந்து வொர்க்கவுட் செய்து வருகிறார். அவர் புஷ் அப்ஸ் செய்த வீடியோவையும் தனது புதிய போஸ்ட்டில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார். சமந்தா தான் தங்கியுள்ள இடத்தின் அழகையும், தனது உணவுகளையும் போட்டோக்களாக எடுத்து தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரசிகர்கள் மத்தியில் கடை விரித்துக் காட்டி வருகிறார்.
ஆஸ்திரேலியாவிலும் ரசிகர்கள் கூட்டம்: இந்தியளவில் மட்டுமின்றி சமந்தாவுக்கு உலகளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ராஜ் மற்றும் டிகே இயக்கிய வெப்சீரிஸ்களில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து அசத்திய சமந்தாவுக்கு ஆஸ்திரேலியாவிலும் இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்களா என வியக்க வைக்கும் அளவுக்கு அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications











