Samantha: லண்டனில் லட்டு மாதிரி இருக்காரே சமந்தா.. ஒவ்வொரு போஸும் சும்மா வேறலெவல் தான் போங்க!

சென்னை: நடிகை சமந்தா சில மாதங்கள் ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளார். ஒல்லி பெல்லியாக ஆளே மாறிவிட்டாரே சமந்தா என அவருடைய லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து சில ரசிகர்கள் கவலைப்பட்டாலும் எப்போதுமே அழகின் உச்சம் தான் சமந்தா என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

samantha heroine citadel

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தா சில காரணங்களுக்காக அவரை பிரிந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

samantha heroine citadel

நடிகை சமந்தா தனது திருமண முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக நாக சைதன்யா அவசர அவசரமாக சோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்துக் கொண்டு விரைவில் திருமணம் செய்ய தயார் ஆகி இருப்பதே இந்த பிரச்சனை தான் சமந்தாவை அவர் பிரியக் காரணமா? என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளது.

samantha heroine citadel

லண்டனில் லட்டு மாதிரி: நடிகை சமந்தா சமீபத்தில் சிட்டாடல் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்காக லண்டனில் முகாமிட்டுள்ளார். ரூசோ சகோதரர்கள் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள சிட்டாடல் வெப்சீரிஸின் சர்வதேச படைப்பில் பிரியங்கா சோப்ராவும் இந்திய படைப்பான சிட்டாடல் ஹனி பனி வெப்சீரிஸில் சமந்தாவும் நடித்துள்ள நிலையில், பிரியங்கா சோப்ராவுடன் அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் டிரெண்டாகின.

samantha heroine citadel

தொடர்ந்து போட்டோஷூட்: நடிகை சமந்தா லண்டனில் உள்ள நிலையில், தினமும் புதிய புதிய ஃபேஷன் உடைகளை அணிந்துக் கொண்டு அவர் அங்கே போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 35.8 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள நடிகை சமந்தா தற்போது சிகப்பு நிற ஹேர் கலரிங் செய்த கூந்தலுடன் ஃபிளவர் பவர் என்கிற கேப்ஷனை கொடுத்து புதிய போட்டோக்களை அடுக்கியுள்ளார்.

samantha heroine citadel

ஹாலிவுட் நடிகை போல: நடிகை சமந்தா தென்னிந்திய நடிகை போலவோ சென்னை பொண்ணு போலவோ இல்லை என்றும் டோட்டலாக ஹாலிவுட் நடிகை போல மாறிவிட்டார் என அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். சிட்டாடல் வெப்சீரிஸ் வரும் நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக காத்திருக்கிறது. சமந்தா தனது அடுத்தடுத்த பட வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X